விக்கிரவாண்டியில் 84.36%, நாங்குநேரியில் 66.10% ஓட்டுப்பதிவு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

விக்கிரவாண்டியில் 84.36%, நாங்குநேரியில் 66.10% ஓட்டுப்பதிவு

Updated : அக் 21, 2019 | Added : அக் 21, 2019 | கருத்துகள் (73)
Share

சென்னை: தமிழகத்தின் விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜர்நகர் சட்டசபை தொகுதிகளுக்கு இன்று(அக்.,21) இடைத்தேர்தல் நடைபெற்றது. மாலை . காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது. மாலை 6 மணி நிலவரப்படி
விக்கிரவாண்டியில் 84.36%, நாங்குநேரியில் 66.10% ஓட்டு பதிவாகி உள்ளது.



latest tamil news



தமிழகத்தில், நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கு, இன்று (அக்., 21) இடைத்தேர்தல் நடந்தது. திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தொகுதியில், தி.மு.க., கூட்டணி கட்சியான, காங்கிரஸ் வேட்பாளர் மனோகரன், அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜநாராயணன் உட்பட, 23 பேர் களத்தில் உள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் புகழேந்தி, அ.தி.மு.க., வேட்பாளர் முத்தமிழ்செல்வன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கந்தசாமி, உட்பட, 12 பேர் களத்தில் உள்ளனர். இரு தொகுதிகளிலும், வேட்பாளர்கள் அதிகம் இருந்தாலும், விக்கிரவாண்டியில் அ.தி.மு.க., - தி.மு.க., இடையிலும், நாங்குநேரியில் காங்., - அ.தி.மு.க., இடையிலும், நேரடி போட்டி நிலவுகிறது.


latest tamil news



கடந்த 15 நாட்களாக களை கட்டிய இடைத்தேர்தல் பிரசாரம் நேற்று முன்தினம்(அக்.,19) மாலை ஓய்ந்தது. அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் பிரசாரம் செய்தனர். அனைத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், மாவட்ட செயலர்கள், இரு தொகுதிகளிலும் முகாமிட்டு, தேர்தல் பணிகளை கவனித்தனர்.

அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, கூட்டணி கட்சி தலைவர்களான, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அக்கட்சி இளைஞர் அணி தலைவர் அன்புமணி, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா ஆகியோர் பிரசாரம் செய்தனர்.

தி.மு.க., மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், இளைஞர் அணித் தலைவர் உதயநிதி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, நடிகை குஷ்பு ஆகியோர் பிரசாரம் செய்தனர். தி.மு.க., சார்பிலும், மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், தொகுதியில் முகாமிட்டு, தேர்தல் பணிகளை கவனித்தனர்.


latest tamil news



இன்று காலை 7 மணிக்கு துவங்கி நடந்து வரும் ஓட்டுப்பதிவு அமைதியாக நடந்தது. வன்முறை ஏதும் இல்லை. மாலை 6 மணி வரை ஓட்டுப்பதிவு நடந்தது. வரும் 24ம் தேதி ஓட்டுக்கள் எண்ணப்படுகிறது.


ஓட்டு நிலவரம்:

மாலை 6 மணி நிலவரப்படி,
விக்கிரவாண்டி -84.36%
நாங்குநேரி -66.10%
புதுச்சேரி, காமராஜ் நகர் - 69.44 %


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X