பொது செய்தி

தமிழ்நாடு

பருவமழை தீவிரம் : 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Updated : அக் 21, 2019 | Added : அக் 21, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement

சென்னை : வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணம் சிவகங்கை, கன்னியாகுமரி, கோவை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



latest tamil news


தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையிலும் சுற்றுவட்டாரப்பகுதிகளிலும் இன்று (அக்.21) அதிகாலை கனமழை கொட்டியது.தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், மாதவரம், போரூர், பம்மல், நுங்கம்பாக்கம், கிண்டி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது.


latest tamil news


கனமழை காரணமாக கோவை மாவட்டத்திலும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் ராசாமணி அறிவித்துள்ளார். தொடர் மழை காரணமாக சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று(அக்.,21) விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட்டுள்ளார். கன்னியாகுமயில் பெய்து வரும் கனமழையால், மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். அதே சமயம் சென்னையில் பள்ளிகள் வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajaiah Samuel Muthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
21-அக்-201915:53:13 IST Report Abuse
Rajaiah Samuel Muthiahraj நீர்நிலை ஆதாரங்கள் காப்பாற்றப்படும் வரை மழைநீர் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும் விரைவில் மக்கள் விழிப்புணர்வு கொண்டிடின் அரசு தூங்காமல் இருப்பின் அதிகாரிகள் லஞ்சம் எனும் செயலுக்கு அடிபணியாது இருப்பின் நீரால் பாதிப்பு ஏற்படாமல் செழுமை மற்றும் பசுமை உண்டாகும்
Rate this:
Cancel
Nagarajan D - Coimbatore,இந்தியா
21-அக்-201911:00:00 IST Report Abuse
Nagarajan D அரசாங்கமே விடுமுறை அறிவித்து விட்டால் மழையும் நின்று வெய்யில் அடிக்க ஆரம்பித்துவிடுகிறது
Rate this:
Cancel
Rameeparithi - Bangalore,இந்தியா
21-அக்-201910:00:28 IST Report Abuse
Rameeparithi மறக்காமல் மழை நீரை வீணடிப்பதை தவிர்ப்போம் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X