பொது செய்தி

இந்தியா

2 மாநில சட்டசபை , 53 தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு துவங்கியது

Updated : அக் 21, 2019 | Added : அக் 21, 2019 | கருத்துகள் (3)
Advertisement

புதுடில்லி : நாடு முழுவதும் 2 மாநில சட்டசபை மற்றும் 18 மாநிலங்களில் உள்ள 51 சட்டசபை தொகுதிகள் மற்றும் 2 லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஓட்டுப்பதிவு இன்று (அக்.,21) காலை 7 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது.







மகாராஷ்டிரா மற்றும் அரியானா மாநிலங்களில் சட்டசபை தேர்தல் இன்று நடக்கிறது. 288 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் 3239 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 90 இடங்களைக் கொண்ட அரியானா சட்டசபை தேர்தலில் 105 பெண்கள் உள்ளிட்ட 1169 வேட்படாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் தமிழகத்தின் விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரியின் காமராஜர் நகர் உள்ளிட்ட அசாம், ராஜஸ்தான், கேரளா, தெலுங்கானா, ஒடிசா உள்ளிட்ட 18 மாநிலங்களில் காலியாக உள்ள சட்டசபை மற்றும் லோக்சபா தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது.





தமிழகத்தில் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக மற்றும் திமுக இடையே கடும் போட்டி நிலவுகிறது. மகாராஷ்டிராவில் பா.ஜ.,-சிவசேனா மற்றும் காங்-தேசியவாத காங் கூட்டணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. அரியானாவில் காங்-பா.ஜ., நேரடியாக களத்தில் உள்ளன. லோக்சபா தேர்தலுக்கு பிறகு நடக்கும் முதல் தேர்தல் என்பதால் இரு மாநில சட்டசபை மற்றும் 53 தொகுதி இடைத்தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

காலை 7 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இதன் முன்னிட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவு துவங்கியது முதல் மக்கள் ஆர்வமுடன் ஓட்டளித்து வருகின்றனர். தமிழகம், மகாராஷ்டிரா உள்ளிட்ட சில பகுதிகளில் மழை பெய்த போதிலும், அதனை பொருட்படுத்தாமல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஓட்டளித்து வருகின்றனர். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட தலைவர்களும் தங்களின் ஓட்டுக்களை செலுத்தி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
21-அக்-201913:23:49 IST Report Abuse
narayanan iyer தமிழகத்தில் மக்கள் ஆர்வத்துடன் ஓட்டுபோட வரவில்லை . வாங்கியபணத்திற்கு கடன் தீர்க்க வந்திருக்கிறார்கள் . பணம் வாங்காமல் வந்திருந்தால் பாராட்டலாம் இதில் வேடிக்கை என்னவென்றால் தேர்தல் ஆணையம் கண்டும் காணாமல் இருந்துவிட்டததுதான் .
Rate this:
Share this comment
Cancel
Balaji - Khaithan,குவைத்
21-அக்-201912:46:01 IST Report Abuse
Balaji நாங்குநேரி இடைத்தேர்தல் திணிக்கப்பட்ட ஒன்று.... இந்த தொகுதி ச.ம.உ. நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு தேவையில்லாமல் இடைத்தேர்தலை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.. இதுபோன்று ஒருவர் அரசு வேலையில் இருந்து கொண்டு தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் அவர் அரசு வேலையை ராஜினாமா செய்த பிறகு தான் போட்டியிட முடியும்... அவர்களுக்கு அப்படி இருக்கும் போது ச.ம.உ அல்லது நா.ம.உ ராக இருந்தால் மட்டும் எப்படி வேறொரு தேர்தலில் தாங்கள் வகிக்கும் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யாமல் இதுபோன்று போட்டியிட முடிகிறது... என்னாடா உங்க சட்டம்?????
Rate this:
Share this comment
Cancel
Rajan - Alloliya ,இந்தியா
21-அக்-201908:43:32 IST Report Abuse
Rajan சிங்கிரெஸ் mukt பாரத்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X