பொது செய்தி

இந்தியா

இந்தியாவுடன் கடித போக்குவரத்தை நிறுத்திய பாக்.,

Updated : அக் 21, 2019 | Added : அக் 21, 2019 | கருத்துகள் (10)
Advertisement

புதுடில்லி : இந்தியாவுடனான கடித போக்குவரத்தை பாகிஸ்தான் அரசு நிறுத்தி உள்ளது. இந்தியாவில் இருந்து வரும் மற்றும் இந்தியாவிற்கு செல்லும் கடித போக்குவரத்தை நிறுத்துவதாக பாக்., தெரிவித்துள்ளது.





காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு இந்தியா-பாக்., இடையே பதற்றம் நிலையே காணப்படுகிறது. இதுவரை 3 முறை போர் ஏற்படும் சூழல் அமைந்துள்ளது. இந்நிலையில் ஆக.,27 ம் தேதி, பாக்.,க்கு கடிதங்கள் அனுப்பப்படுவதை நிறுத்தும்படி இந்தியாவை பாக்., கட்டாயப்படுத்தியது. இது பற்றி தபால் சேவை துறை இயக்குனர் ஆர்.வி.சவுத்ரி கூறுகையில், பாக்., இந்த முடிவு முற்றிலும் தவறானது. பாக்., இது போன்ற நடவடிக்கை மேற்கொள்வது இதுவே முதல் முறை. இந்த உத்தரவை பாக்., எப்போது விலக்கிக் கொள்ளும் என தெரியவில்லை என்றார்.




இந்தியாவில் மொத்தம் 28 வெளிநாட்டு தபால் அலுவலகங்கள் உள்ளன. இதில் பாக்., உடனான தபால் சேவைகள் டில்லி மற்றும் மும்பையில் உள்ள அலுவலகங்களில் இருந்து இயக்கப்படுகின்றன. நாட்டின் பிற மாநிலங்கள் இருந்து பெறப்படும் பாக்.,க்கு செல்ல வேண்டிய கடிதங்கள் டில்லி அலுவலகத்தால் கையாளப்படுகிறது. அதே சமயம் காஷ்மீரில் இருந்து பாக்.,க்கு அனுப்பப்படும் தபால் சேவை மும்பை அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது பற்றி தபால் துறை அதிகாரி கூறுகையில், பாக்.,க்கு செல்லும் கடிதங்கள் பெரும்பாலும் பஞ்சாப் மற்றும் காஷ்மீரில் இருந்தே அனுப்பப்படும். இவற்றில் பெரும்பாலானவை படிப்பு தொடர்பானதாகவே இருக்கும் என்றார்.

காஷ்மீரில் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாக்., ராணுவம் தாக்கி வந்ததால், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பபயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்கியது. இதில் சுமார் 35 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். நேற்று நடைபெற்ற இச்சம்பவமே இந்தியாவுடனான தபால் போக்குவரத்தை உடனடியாக நிறுத்தும் பாக்.,ன் முடிவிற்கு காரணம் என கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
21-அக்-201917:30:27 IST Report Abuse
J.V. Iyer குளத்துடன் கோவித்துக்கொண்டால், குளத்திற்கு நஷ்டமா, பாக்கிகளுக்கு நஷ்டமா?
Rate this:
Share this comment
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
21-அக்-201914:02:20 IST Report Abuse
elakkumanan கடிதம் என்பது ஒரு தப்பிக்கும் வழிமுறை. எனவே, அதை கட்டுமரம் பயன்படுத்தாமல் இருந்திருந்தால் மட்டுமே ஆச்சரியம். கட்டுமரம் காவேரி பிரச்னையை 20 வருசத்துக்கு முந்தியே தீர்த்துவச்சுட்டார் இந்த மாதிரி கடிதங்கள் மூலமாக. கட்டுமரம் ஒரு கருப்பு கலர் மாதிரி. எந்த கலரோடு சேர்ந்தாலும், சேர்ந்த கலர்தான் தன தன்மையை இழக்கும். பக்கிக்கு கடுதாசி தொடர்பு தேவையே இல்லை. கோலத்து தண்ணி தப்பிச்சது.
Rate this:
Share this comment
Cancel
21-அக்-201913:36:04 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் உங்க சங்காத்தமே வேணாம்டா , எல்லாத்தையும் நிறுத்துங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X