பக்தியை வியாபாரமாக்கும் இம்ரான்; மத்திய அமைச்சர் கண்டனம்

Updated : அக் 21, 2019 | Added : அக் 21, 2019 | கருத்துகள் (18)
Advertisement

புதுடில்லி: கர்த்தாபுர் செல்லும் பக்தர்களிடம் 20 டாலர் கட்டணம் வசூலிக்கப்படும் என பாக்., பிரதமர் இம்ரான் கான் அறிவித்திருப்பது வெட்கக் கேடானது என மத்திய அமைச்சர் ஹர்ஷிம்ரத் கவுர் கடுமையாக விமர்சித்துள்ளார்.





சீக்கிய சமயத்தை தோற்றுவித்த முதல் குருவான குருநானக் தேவ் 550வது பிறந்தநாளை முன்னிட்டு சீக்கியர்களுக்குரிய புனித தலமான கர்த்தார்புர் ஷாகிப் குருதுவாரா, வரும் நவ., 09ம் தேதி திறக்கப்படும் என பாக்., பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.
இங்கு உலகம் முழுவதிலும் இருந்து சீக்கியர்கள் விசா இல்லாமல் யாத்திரை மேற்கொள்ளலாம் எனவும், இதனால் சீக்கியர்களின் மிகப்பெரிய வழிபாட்டு தலமாக கர்த்தார்பர் விளங்கும் எனவும் இம்ரான் தெரிவித்தார். மேலும், வளாகத்திற்கு வரும் பக்தர்களிடம் 20 டாலர் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.




இதற்கு மத்திய அமைச்சர் ஹர்ஷிம்ரத் கவுர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், கர்த்தார்புர் செல்லும் பக்தர்களிடம் 20 டாலர் கட்டணம் வசூலிப்பதாக அறிவிப்பு வெளியானது அதிர்ச்சி அளிக்கிறது. ஏழை பக்தர்களால் எப்படி கட்டணம் செலுத்த முடியும். பக்தியை வியாபாரமாக்க முயற்சிக்கின்றனர். இந்த பணத்தால் பாகிஸ்தான் பொருளாதாரம் மேம்படும் என பாக்., பிரதமர் இம்ரான் கான் கூறியிருப்பது வெட்கக்கேடானது. இவ்வாறு அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கருப்பு/வெள்ளை - Chennai,இந்தியா
21-அக்-201920:40:57 IST Report Abuse
கருப்பு/வெள்ளை இது பாகிஸ்தானில் மட்டுமல்ல இந்தியாவில் கூட இருக்கும் அனைத்து மத வழிபட்டுதலங்களுக்கும் இது செல்ல வேண்டும். சிறப்பு நுழைவு கட்டணம், கட்டாய காணிக்கை கட்டணம், வாரிய வளர்ச்சிக்காசு என்று பல வகைகளிலில் இந்தியாவில் அணைத்து மத வழிபட்டு தலங்களும் பாரபட்சமின்றி மக்களின் பணப்பையை ஒரு வழிபார்த்து விடுகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
21-அக்-201918:54:48 IST Report Abuse
ஆப்பு எது எதுல பணம் வருதோ அதெல்லாம் தான் செழித்து வளரும்.
Rate this:
Share this comment
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
21-அக்-201918:39:37 IST Report Abuse
Nathan நுழையவே கட்டணம் இங்கும் பல கோவில்களில் கட்டப் பஞ்சாயத்தாக வசூலிக்கிறார்கள். மாங்காடு காமாட்சி கோவிலுக்கு ஆட்டோவில் சென்று முகனையில் இறங்கினாலும், ரசீது புத்தகத்தோடு ஓடிவந்து அடாவடியாக முப்பது ரூபாய் திட்டி கொண்டே பிடுங்கும் கயாவாளிகளை என்ன சொல்வது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X