பொது செய்தி

இந்தியா

நவ.,18 ல் கூடுகிறது பார்லி., கூட்டத்தொடர்

Updated : அக் 21, 2019 | Added : அக் 21, 2019 | கருத்துகள் (3)
Advertisement

புதுடில்லி : பார்லி., குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18 ம் தேதி துவங்க உள்ளதாக பார்லி., விவகாரங்களுக்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது.






பார்லி., இரு அவைகளின் செயலாளர்களும் இன்று ஆலோசனை நடத்தினர். இரு அவைகளின் செயலாளர்களுடன் ஆலோசித்த பிறகு பார்லி., குளிர்கால கூட்டத்தொடர் தேதியை பார்லி., விவகாரங்களுக்கான அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில், பார்லி.,குளிர்கால கூட்டத்தொடர் நவ18 ம் தேதி துவங்கி டிசம்பர் 13 ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த கூட்டத் தொடரின் போது 2 முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளது.




பொருளாதார சரிவை சீர்செய்யும் விதமாக உள்நாட்டில் புதிதாக துவங்கப்படும் உற்பத்தி தொடர்பான நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரியை குறைக்கும் மசோதா கொண்டு வரப்பட உள்ளது. இதே போன்று செப்.,ல் இ-சிகரெட் விற்பனை, உற்பத்தி ஆகியவற்றிற்கு விதிக்கப்பட்ட தடையை சட்டமாக்கும் மசோதாவும் தாக்கல் செய்யப்பட உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-அக்-201917:27:41 IST Report Abuse
பச்சையப்பன் இந்த பார்லிமென்ட்டில் ஆரிய வந்தேறிகளுக்கு பெரிய ஆப்பு காத்திருக்கின்றது. காவிகள் ஆட்சி இத்துடன் முடிவுக்கு வந்துவிடும். எங்கள் வேட்டி கட்டிய வேங்கையை சிறையில் அடைத்த அநியாயத்திற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Balaji - Khaithan,குவைத்
21-அக்-201917:02:51 IST Report Abuse
Balaji சபை கூச்சல் குழப்பம் இல்லாமல் ஆக்கபூர்வமான விவாத களமாக மக்களின் பிரச்சனைக்கு முக்கியத்துவமளிப்பதாக எப்போது செயல் படுகிறதோ அப்போது தான் உண்மையான ஜனநாயகம் மலரும்..... மாறி மாறி எதிர்க்கட்சிகள் எதையாவது உப்பு சப்பு இல்லாத காரணத்தை சொல்லி சபையை முடக்குவதை (யார் எதிக்கட்சியாக இருந்தாலும்) எப்போது தான் நிறுத்துவார்களோ தெரியவில்லை........
Rate this:
Share this comment
Cancel
G Mahalingam - Delhi,இந்தியா
21-அக்-201915:54:45 IST Report Abuse
G  Mahalingam முதலில் எம்பிக்கள் சட்டத்தை மதிக்க வேண்டும். இன்று தேர்தல் என்று தெரியும் வெளியூர் ஆட்களுக்கு அந்த வழியாக அனுமதி இல்லை என்றும் தெரியும். நான் பாராளுமன்ற உறுப்பினர் அப்படி தான் போவேன் என்றால் நீங்கள் சட்டத்தை மதிக்கவில்லை. உங்களுக்கு ஓட்டு போட்டவர்கள் தலைகுனிய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X