புதுடில்லி : பார்லி., குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18 ம் தேதி துவங்க உள்ளதாக பார்லி., விவகாரங்களுக்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பார்லி., இரு அவைகளின் செயலாளர்களும் இன்று ஆலோசனை நடத்தினர். இரு அவைகளின் செயலாளர்களுடன் ஆலோசித்த பிறகு பார்லி., குளிர்கால கூட்டத்தொடர் தேதியை பார்லி., விவகாரங்களுக்கான அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில், பார்லி.,குளிர்கால கூட்டத்தொடர் நவ18 ம் தேதி துவங்கி டிசம்பர் 13 ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த கூட்டத் தொடரின் போது 2 முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளது.

பொருளாதார சரிவை சீர்செய்யும் விதமாக உள்நாட்டில் புதிதாக துவங்கப்படும் உற்பத்தி தொடர்பான நிறுவனங்களுக்கு கார்ப்பரேட் வரியை குறைக்கும் மசோதா கொண்டு வரப்பட உள்ளது. இதே போன்று செப்.,ல் இ-சிகரெட் விற்பனை, உற்பத்தி ஆகியவற்றிற்கு விதிக்கப்பட்ட தடையை சட்டமாக்கும் மசோதாவும் தாக்கல் செய்யப்பட உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE