பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் மிக கனமழை வாய்ப்பு

Updated : அக் 21, 2019 | Added : அக் 21, 2019 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை: தமிழகத்தின் 17 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.





தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழை, அக்., 16ல் துவங்கியது. இதனால், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்றும் (அக்., 21) நாளையும் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: தென் தமிழகம் மற்றும் குமரி கடல் ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும், அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையும் நிலவுகிறது. இதனால் அடுத்த 2 நாட்களுக்கு கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவள்ளூர், நீலகிரி, கோவை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், சேலம், மதுரை, தேனி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும்.




சென்னையை பொறுத்தவரை அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யக்கூடும். தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை, இயல்பை போல 11 செ.மீ., பதிவாகியுள்ளது. தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் குமரி கடல் பகுதியில் இன்றும் நாளையும் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக குழித்துறை - 14செ.மீ., பெரியநாயக்கன்பாளையம் - 12செ.மீ., மேட்டுப்பாளையம் - 9செ.மீ., குலசேகரபட்டினம் - 8செ.மீ., வால்பாறை, அரவக்குறிச்சி, தூத்துக்குடியில் தலா 7செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ashok - trichy,இந்தியா
21-அக்-201913:36:06 IST Report Abuse
Ashok . அது என்ன ஒரு இரு இடம்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X