பாலோ ஆன் பெற்று தெ.ஆப்ரிக்கா பரிதாபம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

'பாலோ ஆன்' பெற்று தெ.ஆப்ரிக்கா பரிதாபம்

Updated : அக் 21, 2019 | Added : அக் 21, 2019 | கருத்துகள் (2)
Share

ராஞ்சி: ராஞ்சி டெஸ்டில் முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி 162 ரன்னுக்கு சுருண்டது. 'பாலோ ஆன்' பெற்று இரண்டாவது இன்னிங்சை தொடர்கிறது.



latest tamil news



இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்ட் முடிவில் இந்திய அணி 2-0 என்ற முன்னிலையுடன் தொடரை கைப்பற்றியது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் ராஞ்சியில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 497/9 ரன்கள் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. இரண்டாவது நாள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 9 ரன்கள் எடுத்திருந்தது. டுபிளசி (1), ஹம்ஜா (0) அவுட்டாகாமல் இருந்தனர்.


latest tamil news





ஜடேஜா சுழலில் போல்டு


இன்று (அக்., 21) மூன்றாவது நாள் ஆட்டம் நடக்கிறது. உமேஷ் யாதவ் வீசிய முதல் ஓவரின் 5வது பந்தில் டுபிளசி (1) போல்டானார். பின் பவுமாவுடன் இணைந்த ஹம்ஜா டெஸ்ட் அரங்கில் முதல் அரைசதம் எட்டினார். நான்காவது விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்த போது, ஜடேஜா சுழலில் ஹம்ஜா (62) போல்டானார். அறிமுக 'சுழல்' வீரர் நதீம், தனது 4வது ஓவரில் பவுமாவை (32) வெளியேற்றி அசத்தினார். மறுபுறம் மீண்டும் மிரட்டிய ஜடேஜா, இம்முறை கிளாசனையும் (6) போல்டாக்கினார். பீட் (4) முகமது ஷமியிடம் சரிந்தார். ரபாடா (0), உமேஷ் யாதவின் துல்லிய 'த்ரோவில்' ரன் அவுட்டானார். அடுத்து ஜார்ஜ் லிண்டே, நார்ட்ஜே ஜோடி சேர்ந்தனர்.


latest tamil news



9வது விக்கெட்டுக்கு 104 பந்துகளை எதிர்கொண்டு, 32 ரன்கள் சேர்த்தனர். இந்நிலையில் ஜார்ஜை (37), உமேஷ் வெளியேற்றினார். கடைசியில் நார்ட்ஜே (4) அவுட்டாக, தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 162 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் உமேஷ் யாதவ் 3, ஜடேஜா, ஷமி, நதீம் தலா 3 விக்கெட் சாய்த்தனர். இதனால், 335 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை இரண்டாவது இன்னிங்சை தொடருமாறு 'பாலோ ஆன்' கொடுத்தது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X