பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு 'ரெட்' அலர்ட்

Updated : அக் 21, 2019 | Added : அக் 21, 2019 | கருத்துகள் (4)
Advertisement

சென்னை: தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் கோவை ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.






தமிழகத்தில், வடகிழக்கு பருவ மழை, அக்., 16ல் துவங்கியது. இதனால், கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம், கேரளா மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளில் நாளை (அக்., 22) மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுச்சேர, காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், நீலகிரி மற்றும் கோவை ஆகிய 4 மாவட்டங்களுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





மேலும், சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது:
தென் தமிழகம் மற்றும் குமரி கடல் ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும், அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையும் நிலவுகிறது. இதனால் அடுத்த 2 நாட்களுக்கு கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவள்ளூர், நீலகிரி, கோவை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், சேலம், மதுரை, தேனி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும். இவ்வாறு பாலச்சந்திரன் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
21-அக்-201917:06:59 IST Report Abuse
தமிழர்நீதி உடனே மத்தியஅரசு கஜானாவிலிருந்து ஒரு 1000 கோடி கொடுத்து ,( 1000 கோடி என்றால் ..ஒரு கட்சி அலுவலகம் கட்ட கூட இப்போது குறைந்தது ..இவளவு ஆகுது ) மீட்பு பணிக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை , நிவாரண முகாம் ஏற்பாடு , மின்சாரம் , குடிநீர் , போக்குவர்து அடிப்படை வசதிகள் தர மேம்பாடு என்று களம் இறங்கல்லாம். பணம் போதவில்லை என்றால் தமிழக அமைச்சர்கள் ,அதிகாரிகள் , அமைச்சர்களின் பினாமி தொழிலதிபர்கள் குத்தகைகாரர்கள், ஜாக்கி வாசுதேவ் போன்ற மத போதகர்கள் வீடுகளில் ரைட் விட்டு சேர்த்து நிவாரணம் ஏற்பாடுகளை செய்துடுங்கள் .
Rate this:
Share this comment
veeratamilan - chennai,இந்தியா
21-அக்-201918:34:29 IST Report Abuse
veeratamilanகருணாநிதி , சிதம்பரம் வீட்டில உள்ளது மட்டும் எடுத்தா போதும் இந்த நாட்டோட எல்லாரோட பிரச்சினையையும் தீர்த்திடலாம்....
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
21-அக்-201916:10:40 IST Report Abuse
இந்தியன் kumar வருண பகவான் அருளால் மழை பெய்து நாடு செழிக்கட்டும் நீரின்றி அமையாது உலகு.
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
21-அக்-201916:05:27 IST Report Abuse
mindum vasantham இங்கே வங்க கடலில் தாழ்வு பகுதி உருவாக்க வேண்டும் , சென்னையில் இரண்டு ஆண்டுகள் மழை சரி இல்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X