உலக நாடுகளுக்கும் பாக்., சவாலாக இருக்கிறது: பாஜ., பொதுச்செயலாளர்

Updated : அக் 21, 2019 | Added : அக் 21, 2019 | கருத்துகள் (5)
Advertisement

புதுடில்லி: உலக பயங்கரவாதத்தின் மையப்புள்ளியாக இருக்கும் பாகிஸ்தான், இந்தியாவுக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கே சவாலாக இருக்கிறது என பாஜ., பொதுச்செயலாளர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார்.





பாஜ., பொதுச்செயலாளர் ராம் மாதவ் டில்லியில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: பாகிஸ்தானுடன் இந்தியா, நட்புறவோடு இருக்க விரும்புகிறது. ஆனால், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாக்., முதலில் கைவிடவேண்டும். இன்றைய சூழலில் இந்தியா மட்டுமல்ல உலக நாடுகளுக்கும் பாகிஸ்தான் உடனான உறவில் பிரச்னை இருப்பதாக கருதுகிறேன். குறிப்பாக அந்த நாடு, பயங்கரவாதத்துக்கு ஆதரவாகவும், தேவையான உதவிகளையும் செய்வது உலக நாடுகளுக்கு கவலையளிக்கிறது.




முன்பெல்லாம், பாகிஸ்தான் உடன் பேச்சு நடத்துங்கள் என பல நாடுகள் இந்தியாவுக்கு அறிவுறுத்தின. ஆனால், தற்போது பயங்கரவாதத்தின் மையப்புள்ளியாக பாக்., இருப்பதால் எந்த நாடும் நம்மிடம் சொல்வதில்லை. இந்தியாவுக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கே பாக்., சவாலாக இருக்கிறது. ஜனநாயக உலகில் பயங்கரவாதம் போன்ற சில முக்கியப்பிரச்சினை இருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் 370வது பிரிவு நீக்கப்பட்டு, சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டபின், காஷ்மீர் குறித்துப் பேசிய விதத்திற்காக அந்த நாடு தனித்து விடப்பட்டுள்ளது. இவ்வாறு ராம் மாதவ் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
22-அக்-201919:41:32 IST Report Abuse
Jayvee Pakistan prajaigalai naadu kadathum neram vandhuvittathu..
Rate this:
Share this comment
Cancel
Rajan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
21-அக்-201922:36:30 IST Report Abuse
Rajan காங்கிரஸ் முக்ட் பாரத்,
Rate this:
Share this comment
Cancel
Giramani Thiyagarajan - Chennai,இந்தியா
21-அக்-201918:46:22 IST Report Abuse
Giramani Thiyagarajan உங்களுக்கு தேசப்பற்று என்றால் என்ன அர்த்தம் என்றாவது புரியுமா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X