பொது செய்தி

இந்தியா

இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இந்தியா

Updated : அக் 21, 2019 | Added : அக் 21, 2019
Advertisement

ராஞ்சி: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான ராஞ்சி டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற காத்திருக்கிறது.






இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு டெஸ்ட் முடிவில் இந்திய அணி 2-0 என்ற முன்னிலையுடன் தொடரை கைப்பற்றியது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் ராஞ்சியில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 497/9 ரன்கள் எடுத்து 'டிக்ளேர்' செய்தது.
இரண்டாவது நாள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 2 விக்கெட்டுக்கு 9 ரன்கள் எடுத்திருந்தது. டுபிளசி (1), ஹம்ஜா (0) அவுட்டாகாமல் இருந்தனர். இன்று (அக்., 21) மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. உமேஷ் யாதவ் வீசிய முதல் ஓவரின் 5வது பந்தில் டுபிளசி (1) போல்டானார். பின் பவுமாவுடன் இணைந்த ஹம்ஜா டெஸ்ட் அரங்கில் முதல் அரைசதம் எட்டினார்.





நான்காவது விக்கெட்டுக்கு 81 ரன்கள் சேர்த்த போது, ஜடேஜா சுழலில் ஹம்ஜா (62) போல்டானார். அறிமுக 'சுழல்' வீரர் நதீம், தனது 4வது ஓவரில் பவுமாவை (32) வெளியேற்றி அசத்தினார். மறுபுறம் மீண்டும் மிரட்டிய ஜடேஜா, இம்முறை கிளாசனையும் (6) போல்டாக்கினார். பீட் (4) முகமது ஷமியிடம் சரிந்தார். ரபாடா (0), உமேஷ் யாதவின் துல்லிய 'த்ரோவில்' ரன் அவுட்டானார்.
அடுத்து ஜார்ஜ் லிண்டே, நார்ட்ஜே ஜோடி சேர்ந்தனர். 9வது விக்கெட்டுக்கு 104 பந்துகளை எதிர்கொண்டு, 32 ரன்கள் சேர்த்தனர். இந்நிலையில் ஜார்ஜை (37), உமேஷ் வெளியேற்றினார். கடைசியில் நார்ட்ஜே (4) அவுட்டாக, தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 162 ரன்னுக்கு சுருண்டது. இந்தியா சார்பில் உமேஷ் யாதவ் 3, ஜடேஜா, ஷமி, நதீம் தலா 3 விக்கெட் சாய்த்தனர்.






'பாலோ ஆன்' சோகம்

335 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, தென் ஆப்ரிக்காவை இரண்டாவது இன்னிங்சை தொடருமாறு 'பாலோ ஆன்' கொடுத்தது. இரண்டாவது இன்னிங்சில் சுதாரித்துக் கொள்வர் என எதிர்பார்த்தால், மாறாக தென் ஆப்ரிக்க வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். குயின்டன் டி காக் (5), ஹம்ஜா (0), டுபிளசி (4), பவுமா (0) என வரிசையாக கிளம்பினர். எல்கர் (16) 'ரிட்டயர்டு ஹர்ட்' முறையில் திரும்பினார். கிளாசன் (5), ஜார்ஜ் (27), பீட் (23) ஏமாற்றினர். ரபாடா 12 ரன் எடுத்தார்.
தென் ஆப்ரிக்க அணி மூன்றாவது நாள் முடிவில் இரண்டாவது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்து, இன்னிங்ஸ், 203 ரன்கள் வித்தியாசத்தில் பின் தங்கியிருந்தது. இந்தியா சார்பில் ஷமி 3, உமேஷ் யாதவ் 2, அஷ்வின், ஜடேஜா தலா 1 விக்கெட் சாய்த்தனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X