அயோத்தி தீர்ப்பு பாதிப்பை ஏற்படுத்தும் :முஸ்லிம் அமைப்புகள் கோர்ட்டில் அறிக்கை

Updated : அக் 23, 2019 | Added : அக் 21, 2019 | கருத்துகள் (34)
Share
Advertisement
அயோத்தி, தீர்ப்பு பாதிப்பு, ஏற்படுத்தும் ,முஸ்லிம் , கோர்ட்டில் அறிக்கை

புதுடில்லி: 'அயோத்தி வழக்கில் அளிக்கப்படும் தீர்ப்பு, நாட்டின் எதிர்கால அரசியலில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்' என, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், முஸ்லிம் அமைப்புகள் கூறியுள்ளன.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்து உள்ளது. இங்குள்ள அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான, உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.


ஒத்திவைப்பு


இந்த வழக்கில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த வழக்கில் தங்களுடைய முக்கியமான கோரிக்கைகள் என்ன, எந்த விஷயத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது குறித்த அறிக்கையை தாக்கல் செய்யும்படி, அனைத்து தரப்பினரையும், உச்ச நீதிமன்ற அமர்வு கேட்டிருந்தது.அதன்படி, ஹிந்து மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில், சீலிட்ட உறையில், அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

உத்தர பிரதேச சன்னி வக்பு வாரியம் உள்ளிட்ட முஸ்லிம் அமைப்புகள் சார்பில், செய்தி அறிக்கையும் கொடுக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், 'இந்த வழக்கில், சீலிட்ட உறையில் தாக்கல் செய்த அறிக்கையை வெளிப்படையாக பதிவு செய்ய வேண்டும்' என, முஸ்லிம் அமைப்புகள், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்விடம் நேற்று முறையிட்டன. அதை, அமர்வு ஏற்றுக் கொண்டது.


அரசியல் சாசனம்


மூத்த வழக்கறிஞர் ராஜிவ் தவான் தயாரித்துள்ள அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:அயோத்தி வழக்கில் இந்த நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு யாருக்கு சாதகமாக இருந்தாலும், அது நாட்டின் எதிர்கால சந்ததியினர் இடையே மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும், நாட்டின் அரசியல் எதிர்காலத்திலும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

கடந்த, 1950ல் இந்தியாவை குடியரசாக அறிவித்த அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கை உள்ள, கோடிக்கணக்கான மக்கள் மனதில், இந்த தீர்ப்பு பாதிப்பை ஏற்படுத்தும்.இந்த தீர்ப்பு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை மனதில் கொண்டு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இருக்க வேண்டும். பல்வேறு மதங்கள், பல்வேறு கலாசாரங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது. உச்ச நீதிமன்றமே, அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டிய அமைப்பு. அதனால், எதிர்கால சந்ததியினர் இந்தத் தீர்ப்பை எப்படி பார்ப்பர் என்பதை உணர்ந்து, அதற்கேற்ப தீர்ப்பு அமைய வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
muthu kumar - மதுக்கூர்,இந்தியா
23-அக்-201914:22:15 IST Report Abuse
muthu kumar அந்த இடத்துல ராமர் கோவிலோ, பாபர் மசூதியோ கட்ட வேண்டியதில்லை. அனைவருக்கும் கடவுளா இருக்கிற கல்வி நிறுவனத்தை கட்டினா இந்து, முஸ்லீம், கிறிஸ்துவங்கன்னு எல்லோரும் ஒரே இடத்துல கல்வி பயிலலாம். யாருக்கும் எந்தவித நஷ்டமும் இருக்காது
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
22-அக்-201916:32:57 IST Report Abuse
Endrum Indian "1950ல் இந்தியாவை குடியரசாக அறிவித்த அரசியல் சாசனத்தின் மீது நம்பிக்கை உள்ள, கோடிக்கணக்கான மக்கள் மனதில்" யாரு அந்த கோடிக்கணக்கான அதாவது 23 கோடிக்கணக்கான பாகிஸ்தான் முஸ்லிம்கள் மனதில் என்று அர்த்தம் என்று கொள்ளவேண்டும்
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
22-அக்-201916:24:30 IST Report Abuse
Endrum Indian என்ன தீர்ப்பு வந்தாலும் அது இந்தியாவில் நாசத்தை ஏற்படுத்தும் இது உறுதி 1) கோவில் கட்ட உத்தரவு - உடனே கொதித்து எழும் பாகிஸ்தான் முஸ்லிம்கள், இந்து எதிர்ப்பு சங்கம் - நாடு முழுவதும் ரகளை 2) கோவில் கட்ட உத்தரவு இல்லை மசூதி கட்ட உத்தரவு - இந்து சங்கங்கள் ஈங்கே அங்கே கொஞ்சம் ரகளை பண்ணும், மத நல்லிணக்க மத சார்பற்ற இந்துக்கள் எனக்கு என்னாச்சி இதனால் என்று அமைதி காப்பர் 3) கொஞ்சம் மசூதி, கொஞ்சம் கோவில் கட்டலாம் என்று வந்தால் அவசர அவசரமாக பாகிஸ்தான் முஸ்லிம்கள் கொஞ்சம் அதிக நிலத்தை (Encroach) எடுத்துக்கொண்டு மசூதி கட்டுவர் - அதனால் மறுபடியும் ரகளை வரும். தீர்ப்பு எப்படி வரவேண்டும் இது ராமர் பிறந்த பூமி என்று கொண்டாடப்படுவதால் அங்கு கோவில் கட்ட உத்தரவு. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனம் , ஆர்ப்பாட்டம், ரகளை, கலகம் செய்தால் அவர்களை உடனே சுட்டுத்தள்ள ஆணை என்று தீர்ப்பு இருந்தால் அமைதியாக இருக்கும் இந்த தீர்ப்பு வந்த பிறகு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X