பொது செய்தி

தமிழ்நாடு

புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் வழங்கிய நடிகர் ரஜினி

Added : அக் 21, 2019
Share
Advertisement
சென்னை:'கஜா' புயலால் வீடுகளை இழந்த, 10 குடும்பத்தினருக்கு, நடிகர் ரஜினி சார்பில், நேற்று வீடுகள் வழங்கப்பட்டன.தமிழகத்தில், 2018 நவம்பரில் தாக்கிய கஜா புயலால், டெல்டா மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது; பலர் வீடுகளை இழந்தனர். கான்கிரீட் வீடுகள்பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ரஜினி மக்கள் மன்றம் சார்பில், 50 லட்சம் ரூபாய் மதிப்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.'நாகை
 புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் வழங்கிய நடிகர் ரஜினி

சென்னை:'கஜா' புயலால் வீடுகளை இழந்த, 10 குடும்பத்தினருக்கு, நடிகர் ரஜினி சார்பில், நேற்று வீடுகள் வழங்கப்பட்டன.

தமிழகத்தில், 2018 நவம்பரில் தாக்கிய கஜா புயலால், டெல்டா மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது; பலர் வீடுகளை இழந்தனர். கான்கிரீட் வீடுகள்பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ரஜினி மக்கள் மன்றம் சார்பில், 50 லட்சம் ரூபாய் மதிப்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.'நாகை மாவட்டத்தில் வீடுகளை இழந்த, 10 குடும்பத்தினருக்கு வீடுகள் கட்டித் தரப்படும்' என, ரஜினி அறிவித்திருந்தார்.
அதன்படி, நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் உள்ள கோடியக்கரை, ஈசனுார், வெள்ளப்பள்ளம், ஆலங்குடி, கோயில்பத்து மற்றும் நாலுவேலுபதி கிராமங்களை சேர்ந்த, 10 குடும்பத்தினருக்கு, கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகள் தலா, 218 சதுர அடியில், 1.85 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளன.
நெகிழ்ச்சி
வீடுகள் கட்டும் பணி முடிந்ததை அடுத்து, பயனாளிகளை நேற்று, போயஸ் கார்டனில் உள்ள தன் வீட்டிற்கு வரவழைத்த ரஜினி, புதிய வீடுகளுக்கான சாவியை, அவர்களிடம் வழங்கினார்.வீடுகளை பெற்றவர்கள், ரஜினிக்கும், ரஜினி மன்ற நிர்வாகிகளுக்கும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். ரஜினியும், நாகை மற்றும் சுற்றுவட்டார மக்களின் தற்போதைய வாழ்க்கை நிலை மற்றும் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X