பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் பரவலாக மழை

Updated : அக் 21, 2019 | Added : அக் 21, 2019
Advertisement

சென்னை:தமிழகத்தில் சென்னை உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.






சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளில், அனேக இடங்களில் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. காலையில் பள்ளி கல்லூரிகளுக்குச் சென்ற மாணவ மாணவிகளும், அலுவலகங்களுக்குச் சென்றோரும் மழையில் நனைந்தபடியே சென்றனர்.





திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சுற்று வட்டாரத்தில் செம்பூர், அத்திப்பாக்கம், மாம்பட்டு, ஆராசூர், பொண்ணுர் உள்ளிட்ட கிராமங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
கோவை மாவட்டத்தில் இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது . மழை காரணமாக வீரபாண்டி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தின் ஒரு பகுதி சேதம் அடைந்துள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மழை காரணமாக நொய்யலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் வழியாக சென்று காவிரியில் கலக்கும் வழித்தடத்தில் 10 க்கும் மேற்பட்ட தடுப்பணைகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கோவை திருப்பூர், ஈரோடு மாவட்ட கரையோரப்பகுதி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த மழையால் கோதையாறு, தாமிரபரணி, பரழியாறு ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
கோவை மாவட்டம் வால்பாறை மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 24 மணி நேரமாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக கொடைக்கானலில் இருந்து அடுக்கம் வழியாக பெரியகுளம் செல்லும் பாதையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சிமலை மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் மழை பெய்து வருவதால் 57 அடி உயரம் கொண்ட மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50 அடியாகவும், நீர்இருப்பு 339.74 மில்லியன் கனஅடியாகவும் அதிகரித்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 494 கனஅடி தண்ணீர் வருகிறது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் பலத்த மழை பெய்தது. மெட்டல்வாடி தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்தபடி சென்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாகை மாவட்டம் வேதாரண்யம், அகஸ்தியன்பள்ளி, கருப்பம்புலம், கரியாப்பட்டினம் செட்டிப்புலம், நெய்விளக்கு, தோப்புதுறை, தேத்தாகுடி, செம்போடை ஆகிய பகுதிகளில் மதியம் முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதுபோல் சிவகங்கை, ராமநாதபுரம், பெரம்பூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் மழை பெய்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X