பொது செய்தி

இந்தியா

'சசிகலாவை முன்கூட்டியே விடுவிக்க வாய்ப்பில்லை'

Updated : அக் 23, 2019 | Added : அக் 21, 2019 | கருத்துகள் (22+ 53)
Advertisement
'சசிகலாவை முன்கூட்டி, விடுதலை, டி.ஜி.பி.,

பெங்களூரு: ''சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறையில் தண்டனை பெற்று வரும் சசிகலாவுக்கு, நன்னடத்தை விதிமுறைகள் பொருந்தாது. அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய வாய்ப்பில்லை. இன்னும், 16 மாதங்கள் தண்டனை அனுபவித்த பின் தான், அவர் விடுதலை செய்யப்படுவார்,'' என, கர்நாடக சிறைத்துறை, டி.ஜி.பி., மேக்ரிக் தெரிவித்தார்.சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், 2017, பிப்ரவரி, 15ல் அடைக்கப்பட்டார்.


2 கோடி ரூபாய் லஞ்சம்


சிறையில், சசிகலாவுக்கு தனி சமையல் அறை, அவரை சந்திக்க வருபவர்களுக்கு தனி நாற்காலி, குக்கர், வண்ண உடைகள் அணிவது, அவருக்காக ஐந்து அறைகள் ஒதுக்கியது போன்ற சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க, சிறை அதிகாரிகள், 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக, அப்போதைய சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா குற்றஞ்சாட்டியிருந்தார்.இதை விசாரித்த, கர்நாடக அரசு அமைத்த உயர்மட்டக் குழு, சசிகலாவுக்கு விதிமுறைகளை மீறி, சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தது உண்மை தான் என, அறிக்கை தாக்கல் செய்தது. இவ்விவகாரத்தில், லஞ்சப் புகார் எழுந்ததால், இதில் வழக்கு பதிவு செய்து, கர்நாடக ஊழல் தடுப்பு படை விசாரித்து வருகிறது.

இந்நிலையில், சசிகலா, இரண்டு முறை, எமர்ஜென்சி பரோலில் சிறையிலிருந்து வெளியே சென்றார். மற்றபடி, சிறையில் காளான், தக்காளி, வெண்டைக்காய் போன்ற காய்கறிகளை வளர்த்தும், கன்னட மொழி பயின்றும் வந்தார்.இதற்கிடையே, நன்னடத்தை விதிகளின் படி, சசிகலா முன்னதாகவே விடுதலை செய்யப்படலாம் என, தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது பற்றி, கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மையிடம் நேற்று விசாரித்த போது, சசிகலா பற்றிய கேள்விக்கு பதிலளிக்க முடியாது என, மறுத்து விட்டார்.


நன்னடத்தை


பின், கர்நாடக சிறைத்துறை, டி.ஜி.பி., மேக்ரிக், பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில், நேற்று அளித்த பேட்டி:சசிகலா, நன்னடத்தை விதிகளின் படி, முன்னதாகவே விடுதலை செய்யப்படுவார் என, வெளியாகும் செய்திகள் பொய்யானவை. ஒவ்வொரு வழக்கிலும் தண்டனை பெற்றவர்களுக்கு என, ஒவ்வொரு விதிமுறை உள்ளது. கொலை, கொலை முயற்சி போன்ற குற்றவாளிகள் மட்டுமே, தண்டனை காலத்துக்கு முன்கூட்டியே, நன்னடத்தையின் படி விடுதலை செய்யப்படுவர். சசிகலா சம்பந்தப்பட்ட ஊழல் வழக்கில், இந்த விதிமுறை பொருந்தாது என்பதால், அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய வாய்ப்பில்லை. தண்டனை காலம் முழுவதும் அனுபவித்த பின் தான், சசிகலா விடுதலை செய்யப்படுவார். இவ்வாறு, அவர் கூறினார்.இதனால், இன்னும், 16 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டிய கட்டாயம் சசிகலாவுக்கு ஏற்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (22+ 53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkat - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
22-அக்-201916:20:20 IST Report Abuse
Venkat முடிஞ்சா இன்னுமொரு 4 வருடங்கள் உள்ளேயே வெச்சிருங்க. வெளியில வந்து நாட்டுக்கு எந்த பலனும் இல்ல. அடிச்சது பத்தாதுன்னு இன்னும் எப்பிடி கொள்ளை அடிக்கலாம்னு தான் யோசிப்பா.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
22-அக்-201915:48:23 IST Report Abuse
Endrum Indian நம்பாதே, நம்பாதே இவர்கள் சொல்வதை???நல்ல விதமாக பெட்டி கிடைத்தது என்றால் ஏதோ ஒரு செய்தி சொல்லி இவளை ரிலீஸ் செய்து விடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
s.rajagopalan - chennai ,இந்தியா
22-அக்-201914:35:20 IST Report Abuse
s.rajagopalan தமிழ்நாட்டிற்கு பறிசு நன்றி , டி ஐ ஜி அவர்களே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X