எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

தள்ளிப்போகிறது உள்ளாட்சி தேர்தல்:தேர்தல் ஆணையம் திடீர் ஆலோசனை

Updated : அக் 22, 2019 | Added : அக் 21, 2019 | கருத்துகள் (6)
Advertisement
தள்ளிப்போகிறது,உள்ளாட்சி, தேர்தல், ஆலோசனை, தேர்தல் ஆணைய அதிகாரிகள்

மழையால், உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போடுவது குறித்து, மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.தமிழகத்தில், 2016 முதல், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை.

இதனால், உள்ளாட்சி பகுதிகளில், சாலைகள், மின் விளக்கு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்வதில், இழுபறி நீடித்து வருகிறது. உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை, இம்மாத இறுதிக்குள் வெளியிடுவதாக, உச்ச நீதிமன்றத்தில், மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதற்கு, குறைந்த அவகாசமே உள்ளது. விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகள், 24ல் வெளியாகவுள்ளன. தேர்தல் முடிவுக்கு பின், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட, மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வந்தது. தற்போது, வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.

வரும் நாட்களில், கன மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மழை முன்னெச்சரிக்கை பணிகளில், மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில், நேற்று அவசர ஆலோசனை நடந்தது.

இதில், மாநில தேர்தல் ஆணையர் ஆர்.பழனிசாமி, செயலர் எஸ்.பழனிசாமி, ஊரக மற்றும் நகர்புற முதன்மை தேர்தல் அதிகாரிகள், சட்ட ஆலோசகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒரு மணி நேரத்திற்கு மேல் நீடித்த, இந்த ஆலோசனையில், உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போடுவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.உச்ச நீதிமன்றத்தை அணுகி, நிலைமையை எடுத்துக் கூறி, அவகாசம் பெறுவது குறித்து, மாநில தேர்தல் ஆணைய வழக்கறிஞர்களிடம் கருத்து கேட்கவும், இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிகிறது. -- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Chennai ,இந்தியா
23-அக்-201900:05:05 IST Report Abuse
Raj சட்டத்தை மதிக்காத அரசுக்கு டாக்டர் பட்டம்.
Rate this:
Share this comment
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
22-அக்-201914:43:33 IST Report Abuse
Anantharaman Srinivasan 24 ம் தேதி முடிவுகள் எப்படி இருக்குமோ என்ற பயம் ஆளும் கட்சிக்கு. எனவே இரண்டு நாட்களுக்கு முன்பே தேர்தல் ஆணையம் மூலமாக தொடங்கி விட்டது தன் வேலையை...
Rate this:
Share this comment
Cancel
22-அக்-201909:56:04 IST Report Abuse
செய்யாறு மு. கருணாகரன் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருப்பதற்கு எதாவது ஒரு காரணத்தை தேர்தல் கமிசன் தேடுகிறது ,ஆனால் அது உண்மையில்லை ,வருகிற டிசம்பர் மாதத்தில் பத்து தேதிக்குள் நடத்தலாம் டிசம்பர் மாதத்தில் மழை இருக்காது .இனியும் உள்ளாட்சி தேர்தலை தள்ளிபோடுவதற்கு எந்த காரணத்தையும் சொல்லவேண்டாம் ,இந்த மூன்று வருடமாக கிராமப்புற நல பணிகள் முடங்கியுள்ளது பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு வெகு விரைவில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி பொதுமக்களின் நலனை பேணிக்காக்கவும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X