பொது செய்தி

தமிழ்நாடு

'தமிழ் மொழி அழகானது; தமிழ் மக்கள் அபூர்வமானவர்கள்': பிரதமர் மோடி பெருமிதம்

Updated : அக் 23, 2019 | Added : அக் 21, 2019 | கருத்துகள் (81)
Share
Advertisement
Modi,Tamil,PM,தினமலர்,dinamalar,தமிழ் மொழி, அழகானது, தமிழ் மக்கள், அபூர்வமானவர்கள், மோடி, பெருமிதம்

சென்னை: 'தமிழ் மொழி அழகானது. தமிழ் மக்கள் அபூர்வமானவர்கள்' என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி, சமீபத்தில் சீன அதிபர் ஸீ ஜின்பிங்கை, மாமல்லபுரத்தில் சந்தித்து பேசினார். அங்குள்ள கோவளத்தில், தனியார் ஓட்டலில், ஒரு நாள் இரவு தங்கினார். மறுநாள் அதிகாலை, கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்டார்.

இந்நிலையில், மாமல்லபுரம் கடற்கரை குறித்து, தான் எழுதிய கவிதையின் தமிழாக்கத்தை, நேற்று முன்தினம் தன், 'டுவிட்டர்' பக்கத்தில், பிரதமர் வெளியிட்டார். அந்த கவிதை, தமிழக மக்களிடம் வேகமாக பரவியது.கவிதையை பார்த்த, நடிகர் விவேக், தன், 'டுவிட்டர்' பக்கத்தில், 'இயற்கையை வணங்குவது, கடவுளை வணங்குவதற்கு சமம். ஏனெனில், இயற்கையே சர்வ சக்தியுடையது; பெரியது. 'மதிப்பிற்குரிய மோடி சார், மாமல்லபுரம் கடற்கரை குறித்த, உங்கள் கவிதைக்காக, நம் தேசத்தின் சார்பாக, உங்களுக்கு நன்றி' என, கூறியிருந்தார்.

அதற்கு, பிரதமர் நன்றி தெரிவித்து, பதிவு வெளியிட்டுள்ளார். அதில், 'இயற்கையின் மீதான மரியாதை என்பது, நம் நெறிமுறைகளின் முக்கிய பகுதியாகும். 'இயற்கை தெய்வீக தன்மையையும், மகத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது. மாமல்லபுரத்தின் அழகிய கரையோரங்களும், காலை அமைதியும், என் சில எண்ணங்களை வெளிப்படுத்த, சரியான தருணங்களை அளித்தன' என்று கூறியுள்ளார்.

அதேபோல, தன் கவிதையை பாராட்டி, நன்றி தெரிவித்த, தயாரிப்பாளர் தனஞ்செயனுக்கும், பிரதமர் நன்றி தெரிவித்து உள்ளார். அதில், 'ஒரு துடிப்பான கலாசாரத்தை வளர்த்த, உலகின் பழமையான மொழியில், என்னை வெளிப்படுத்தியதில் மகிழ்ச்சி. தமிழ் மொழி அழகானது; தமிழ் மக்கள் அபூர்வமானவர்கள்' என, குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (81)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Varadharajulu - Chennai,இந்தியா
23-அக்-201913:28:35 IST Report Abuse
K.Varadharajulu இந்த சீனெல்லாம் எங்கள்ட வேணாம் அப்பு , நாங்க பெரிய பெரிய சீனையெல்லாம் பார்த்தவர்கள் ,எந்த காலத்துலயும் உன்னோட சகவாசம் எங்களுக்கு வேணாம் போ ....போ...போயிட்டே இரு....
Rate this:
Cancel
arudra1951 - Madurai,இந்தியா
23-அக்-201907:35:52 IST Report Abuse
arudra1951 மஹாபலி புர த்திற்கு ஆபத்து வருகின்றது
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
22-அக்-201921:47:47 IST Report Abuse
Bhaskaran தமிழர்கள் அபூர்வ மானவர்கள் மட்டுமல்ல உலகின் தலைசிறந்த உழைப்பாளிகளாகவும் திகழ்ந்துள்ளார் 1940 களில்குவாய் நதியின் மேல்கட்டப்பட்ட ரயில்பாதை அமைக்கும்பணியில் பயன்படுத்தப்பட்ட தொழிலார்கள் போர்கைதிகள் என மூன்றுலட்சம் பேர் பயன்படுத்தப்பட்டுள்ளனர் ஆசியாவிலிருந்து இரண்டு லட்சம் தொழிலார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளார்கள் அதில் பாதிபேர் பேர் தமிழர்கள் அதில் இறந்தவர்கள் சுமார் தொண்ணூறாயிரம்பேர் அதில் இறந்த மற்றவெளிநாட்டினர்க்கு கல்லறை மற்றும் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது இறந்த நாற்பதினாயிரத்துக்கும் மேலான தமிழர்களில் ஒருத்தமிழனுக்கு கூட கல்லறை இல்லை என்று அந்த பாலம் கட்டியத்தைப்பற்றிய நிழலும் நிஜமும் என்றநூலில் படித்துள்ளேன் அன்றும் இன்றும் என்றும் தமிழன் நாதியற்றவனாகவே உள்ளான் என்பது மனதுக்கு மிகவும் வருத்தமாகவுள்ளது பிரிட்ஜ் on river குவாய் படத்தில் கூடஇந்தியர்களை அதிலும் தமிழர்களை பற்றி காட்டப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X