பொது செய்தி

தமிழ்நாடு

கலெக்டர் எச்சரிக்கை: பணிகள் விறுவிறு

Updated : அக் 21, 2019 | Added : அக் 21, 2019 | கருத்துகள் (22)
Advertisement
கலெக்டர் ,எச்சரிக்கை, பணிகள், விறுவிறு, பட்டா

திருவண்ணாமலை : கலெக்டரின் எச்சரிக்கைக்கு பணிந்த, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மூன்று நாட்களாக, இரவு - பகலாக பணியாற்றி, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில், பயனாளிகளுக்கு, வீடு கட்ட ஆணை வழங்க நடவடிக்கை எடுத்துஉள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில், வீடு கட்ட ஆணை வழங்காதது, வீடு கட்டுவோருக்கு பணம் வழங்காமல் அலைக்கழிப்பது போன்ற செயல்களில், பி.டி.ஓ.,க்கள் ஈடுபடுவதாக, கலெக்டர் கந்தசாமிக்கு புகார் சென்றது.அதன் அடிப்படையில், கலெக்டர் கந்தசாமி, 18ல், பி.டி.ஓ.,க்கள், 'வாட்ஸ் ஆப்' குழுவில், 'பயனாளிகளுக்கு, வீடு கட்டும் ஆணை, 21ம் தேதிக்குள் வழங்காவிட்டால், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவீர்' என எச்சரித்து, 'ஆடியோ' பதிவு அனுப்பினார்.

இதனால், பி.டி.ஓ.,க்கள் மற்றும் ஊழியர்கள்அதிர்ச்சியடைந்தனர்.சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், கலெக்டருக்கு பாராட்டு தெரிவித்தனர்.அதே நேரம், கலெக்டரின் பேச்சை கண்டித்து, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஊழியர்கள், நேற்று, கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.கலெக்டரின் எச்சரிக்கையை அடுத்து, பி.டி.ஓ.,க்கள் அனைவரும், மூன்று நாட்களாக, இரவு - பகலாககளப்பணியில் ஈடுபட்டு, வீடு கட்டும் பயனாளிகளுக்கு, ஆணைகளை வழங்கி வருகின்றனர்.ஆணைகள் வழங்கிய விபரம் குறித்து, கலெக்டரின், 'வாட்ஸ் ஆப்' குழுவுக்கு பதிவுகளை அனுப்பி வருகின்றனர்.இதை பார்த்த கலெக்டர், அவரவரின் பணி திறமைக்கு ஏற்ப, 'கீப் இட் அப், வெல்டன், வாழ்த்துக்கள்' என, பாராட்டி பதிவிட்டு வருகிறார். இதுவரை, எந்த, பி.டி.ஓ., மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை.இது குறித்து, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க, மாநில பொதுச் செயலர் பாரி கூறியதாவது:

பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் வீடு கிடைக்க வேண்டும் என, கலெக்டர் குறிக்கோளாக உள்ளார்; இதை வரவேற்கிறோம்.ஆனால், பட்டா இல்லாமல் இருப்போர், வயது முதிர்ந்தோர், வெளியூர் சென்றோர் போன்றவர்களுக்கு ஆணை வழங்க முடியாத நிலை, மணல் தட்டுப்பாடு போன்ற பல்வேறு சிக்கல்கள் உள்ளன; இதை, கலெக்டர் புரிந்து கொள்ள வேண்டும்.
மூன்று நாட்களில், எத்தனை வீடுகளுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது என்ற விபரம், நள்ளிரவு, 12:00 மணிக்குள், இணையதளத்தில், பதிவு செய்யப்பட்டு விடும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
22-அக்-201917:13:55 IST Report Abuse
A.George Alphonse எல்லா மாவட்டங்களிலும் இது போன்ற ஆட்சியாளர்கள் இருந்தால் அரசு திட்டங்கள் எல்லாம் செவ்வனே நடந்தேறும்,லஞ்சமும் ஒழிக்கப்படும்.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
22-அக்-201916:29:00 IST Report Abuse
Endrum Indian இரவு - பகலாக பணியாற்றி, பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில், பயனாளிகளுக்கு, வீடு கட்ட ஆணை வழங்க நடவடிக்கை???நானும் என்னவோ வீட்டையே கட்டிக்கொடுத்திட்டாங்க அதுக்குத்தான் இவ்வளவு பில்ட் அப் என்று நினைத்தேன். ஒரு பேப்பர் சைன் பண்ணி கொடுக்க இவ்வளவு பில்ட் அப் பா???ஆமா ஏன் இருக்காது??? அதுவும் லஞ்சம் வாங்காமல்????????
Rate this:
Share this comment
Cancel
Chandramouli, M.S. - Chennai,இந்தியா
22-அக்-201916:21:15 IST Report Abuse
Chandramouli, M.S. I do appreciate the action of the Collector. The comments of the public itself shows that if everybody work perfectly without any expectation, definitely public will support. Cancellation of property registration because of negligence to look after parents and allowing a student to sit in his car to encourage her IAS dream to come true, are really appreciable gesture. If all Collectors perform like this poverty would be eradicated and India will become vallarasu soon.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X