பொது செய்தி

இந்தியா

விற்பனைக்கு 'ஏர் இந்தியா' விரைவில் ஏலத்திற்கு வருகிறது?

Updated : அக் 21, 2019 | Added : அக் 21, 2019 | கருத்துகள் (28)
Advertisement
விற்பனைக்கு 'ஏர் இந்தியா' விரைவில் ஏலத்திற்கு வருகிறது?

புதுடில்லி: பொதுத்துறை நிறுவனமான 'ஏர் இந்தியா'வை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் ஏல விற்பனை அடுத்த மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.பொதுத்துறை விமான போக்குவரத்து சேவை நிறுவனமான ஏர் இந்தியா 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் சுமையில் சிக்கித் தவிக்கிறது. இதையடுத்து இந்நிறுவனத்தை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது.
இந்நிறுவனத்தின் 76 சதவீத பங்குகள் மட்டும் விற்பனை செய்யப்படும் என முதற்கட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பங்குகளை வாங்க யாரும் முன் வராததால் இந்த முயற்சி தோல்வி அடைந்தது. இதையடுத்து கடன் சுமையை குறைக்க ஏர் இந்தியா நிறுவனத்தின் சில சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டன. தற்போது நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
நிறுவனத்தை வாங்குபவர்கள் ஏர் இந்தியா என்ற பெயரை மாற்றிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஏர் இந்தியாவை வாங்க சில நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. அடுத்த மாதம் இதற்கான விண்ணப்பங்கள் பெறப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.ஏர் இந்தியாவின் 2019 - 20ம் ஆண்டுக்கான கணக்கு விபரங்களின் வாரியக் கூட்டம் இன்று நடக்கிறது. இதில் விற்பனை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
22-அக்-201919:33:40 IST Report Abuse
தமிழ் மைந்தன் காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் பயணம்செய்த அந்த தீவிரவாதிகளின் பெயர் தெரியாதா? அல்லது வேண்டுமா
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
22-அக்-201917:36:29 IST Report Abuse
jagan பணக்காரன் பறக்க ஏன் எல்லார் வரி பணம் வேஸ்ட் பண்ணவேண்டும். தனியராலேயே லபமாய் நடத்தமுடியவில்லை, அரசு என்றால் சுத்தம். எதிஹாட் ஏர்லைன்ஸ் கூட இன்னிக்கோ நாளைக்கோ என்று தான் இருக்கு ...எல்லா வழி தடத்தையும் (bilateral ) ஏலத்தில் விட்டால் 2 லட்சம் கோடிக்கு மேல் தேறும் ...32 ட்ரீம் லைனர் வேற...இதுவரை திறமையின்மையால் சேர்த்த மொத்த நஷ்டத்துயும் அரசு ஏற்குமானால் தனியார் வாங்க முன் வரலாம்
Rate this:
Share this comment
Cancel
konanki - Chennai,இந்தியா
22-அக்-201916:13:17 IST Report Abuse
konanki இன்று தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் கன மழை . இதற்கும் evm தான் காரணம் என்று குவைட் நண்பர் காரணம் சொல்வார் நல்ல டாக்டரிடம் காண்பியுங்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X