மாஜி அமைச்சர் சிவகுமாரின் டில்லி வீட்டில் சி.பி.ஐ., 'ரெய்டு'

Updated : அக் 22, 2019 | Added : அக் 22, 2019 | கருத்துகள் (9)
Advertisement
சிவகுமாரின்  டில்லி வீட்டில் 'ரெய்டு'

முறைகேடான பண பரிமாற்ற வழக்கில் சிக்கியுள்ள, கர்நாடக காங்கிரசை சேர்ந்த, முன்னாள் அமைச்சர் சிவகுமாரின் டில்லி வீட்டில், சி.பி.ஐ., அதிகாரிகள், நேற்று சோதனை நடத்தி, பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

முறைகேடான பண பரிமாற்ற வழக்கில், கர்நாடக காங்கிரசை சேர்ந்த, முன்னாள் அமைச்சர் சிவகுமாரை, அமலாக்க துறை அதிகாரிகள், டில்லியில் கைது செய்தனர். பின், டில்லி அமலாக்க துறை சிறப்பு நீதிமன்ற உத்தரவுப்படி, அங்குள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.





இதற்கிடையில், அவர், மின் துறை அமைச்சராக இருந்த போது, சோலார் மின் உற்பத்தி திட்டத்தில், கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு செய்துள்ளதாக, சி.பி.ஐ., அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், டில்லி சப்தர் ஜங் பகுதியிலுள்ள, சிவகுமாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பில், சி.பி.ஐ., அதிகாரிகள், நேற்று அதிரடி சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். ஏற்கனவே வருமான வரித்துறை, அமலாக்க துறை அதிகாரிகள், சிவகுமாரை விசாரித்துள்ள நிலையில், தற்போது சி.பி.ஐ., அதிகாரிகளின் சோதனையும், அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-அக்-201910:32:16 IST Report Abuse
அருணா அது என்ன ஒவ்வொரு நாள் ஒரு இடம். திடீர் திடீர்னு தோன்றினால் ஏதோ சரியாகப் படவில்லை. கடமையை செய்வது வேறு காரணம் தேடுவது வேறு.
Rate this:
Share this comment
Cancel
22-அக்-201909:17:50 IST Report Abuse
பச்சையப்பன் இதெல்லாம் ரொம்ப ஓவர். கைது செய்து இத்தனை நாள் கழித்து cbi ரெய்டு என்பது அப்பட்டமான பழி வாங்கும் நடவடிக்கை. இது யாரையோ காட்டி குடுக்க மிரட்டல் நடவடிக்கை..
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
22-அக்-201908:17:28 IST Report Abuse
RajanRajan இப்போ கம்பி எண்ணி கொண்டிருக்கும் அரசியல் கனவான்களுக்கு முக்கிய பொறுப்பு என்பது இத்தனை கோடிகளுக்கு ஊழல் பண்ண வழிவகுத்தவர்களை காட்டி கொடுக்காமல் பாதுகாக்க வேண்டும் என்பதை சுட்டி காட்டி விண்ணப்பம் கொடுக்க தான் இத்தனை பேர் கட்சி தலைமை வரை சிறையில் விசிட் பண்ணுறங்கடோய். கூட்டாட்சி கூட்டு கள்ளனுங்களாச்சே. விட்டு மொத்தமாய் கலைச்சு கலாய்ச்சுட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X