சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொடைக்கானல்-அடுக்கம் ரோட்டில் நிலச்சரிவு

Added : அக் 22, 2019
Share
Advertisement
 கொடைக்கானல்-அடுக்கம் ரோட்டில் நிலச்சரிவு

கொடைக்கானல்:கொடைக்கானல் - அடுக்கம் ரோட்டில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
பெருமாள்மலை - பெரியகுளம் அடுக்கம் வழியாக 38 கி.மீ., ரோடு அமைக்கப்படுகிறது. கொடைக்கானலுக்கு மாற்று வழித்தடமாக உள்ள இந்த ரோட்டின் பராமரிப்பு பணிகள் முழுமை பெறாத நிலையில், பஸ் போக்குவரத்து துவங்கவில்லை.அடுக்கம், சாமக்காட்டு பள்ளம் உள்ளிட்ட கிராமத்தினர், விவசாயிகள் சிறிய வாகனங்களில் சென்று வருகின்றனர். கனமழையின் போது 2 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. ஐந்து இடங்களில் ராட்சத பாறைகள் உருண்டன. 20 க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.கொடைக்கானல் நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் இடிபாடுகளை அகற்றும் பணியை மேற்கொண்டனர். ராட்சத பாறைகளை வெடி வைத்து தகர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இலகு ரக வாகனங்கள் நேற்று மாலை முதல் இயக்கப்படுகின்றன.
நெடுஞ்சாலைத்துறை உதவிப் பொறியாளர் செந்தில்குமார் கூறுகையில், ''பாறைகள் துளையிடும் பணி தொடர்ந்து நடக்கிறது. மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் மணல் மூடை அடுக்கப்பட்டு தற்காலிக போக்குவரத்து துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.சுற்றுலா தலங்கள் மூடல்திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை அறிவித்துள்ளது. இதையடுத்து கொடைக்கானலின் 12 மைல் வனச் சுற்றுலா தலங்களான மோயர் சதுக்கம், குணா குகை, துாண்பாறை, பேரிஜம், மன்னவனுார் சூழல் சுற்றுலா தலங்கள் இன்றும், நாளையும் (அக்., 22, 23) பயணிகளின் பாதுகாப்பு கருதி மூடப்படுவதாக ரேஞ்சர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X