பொது செய்தி

தமிழ்நாடு

கை கொடுக்கும் இயற்கை விவசாயம்

Added : அக் 22, 2019
Advertisement

உசிலம்பட்டி : ''உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனுார் மலையடிவாரத்தில் 25 ஏக்கரில் அமைந்த தயானந்த் தோட்டத்தில் ஆறு ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தில் பருவம் இல்லாத நேரங்களிலும் பழங்கள் விளைச்சல் தருகிறது''என்கிறார் இயற்கை விவசாயி காளிமுத்து 42.

இப்பகுதியில் வறட்சி யால் தென்னை, மா, சப்போட்டா, முருங்கை பயிரிட்ட விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாயினர். இயற்கை விவசாயத்தை முன்னெடுத்ததால் வறட்சியையும் தாங்கி தேக்கு, தென்னை, மா, நெல்லி, சப்போட்டா, பப்பாளி, எலுமிச்சை, முருங்கை மரங்கள் இவருக்கு பலன் கொடுத்து வருகிறது.காளிமுத்து கூறியதாவது: உத்தப்பநாயக்கனுார் உறவினர் தோட்டத்தை பராமரிக்க துவங்கினேன். இயற்கை விவசாயத்தை பின்பற்ற முடிவு செய்தேன். மண்புழு உரம் தயாரிப்பு, நாட்டு மாடுகள் வளர்ப்பு, அதன் மூலம் பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம் உள்ளிட்ட இயற்கையான ஊட்டச்சத்துகளை தயாரித்தோம்.

எலுமிச்சை, மா, சப்போட்டா மரக்கன்றுகள் சொட்டு நீர் பாசன வசதியுடன் நடவு செய்தோம். களைகளை அகற்றி வெளியேற்றாமல் மூடாக்கு போட்டோம். நீர் பாய்ச்சும் போதே ஊட்டச்சத்துக்களையும் சேர்த்து சொட்டு நீர் பாசனம் மூலம் மரக்கன்றுகளுக்கு கொண்டு சேர்த்தோம். முதலில் ஓராண்டு விளைச்சல் கை கொடுக்கவில்லை. பின்னர் இயற்கை முறையில் பயிரிட்ட பப்பாளி நன்கு பலன் கொடுத்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் பயிர்களுக்கும் விளைச்சல் போதியதாக இருந்தது. வறட்சி பாதித்தாலும் இங்கு ஒரு மரம் கூட காயவில்லை என்றார். தொடர்புக்கு 98438 41283.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X