பொது செய்தி

தமிழ்நாடு

தீபாவளியை முன்னிட்டு 10 காசுக்கு, 'டி - ஷர்ட்'

Added : அக் 22, 2019 | கருத்துகள் (7)
Share
Advertisement
தீபாவளியை முன்னிட்டு 10 காசுக்கு, 'டி - ஷர்ட்'

திண்டுக்கல்: தீபாவளியை முன்னிட்டு, திண்டுக்கல்லில், 'கூகுள்' ஜவுளிக்கடையில், 10 காசுக்கு, 'டி - ஷர்ட்' என அறிவிப்பை வெளியிட்டு, வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தியுள்ளது.
கடந்த வாரம், திண்டுக்கல்லில், ஒரு பிரியாணி ஓட்டல், முதலில் வரும், 100 பேருக்கு, 5 காசுக்கு, அரை பிளேட் பிரியாணி என, அறிவித்தது; இது, பரவலான வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து, திண்டுக்கல் சந்துக்கடை டவுன் பள்ளிவாசல் தெருவில் உள்ள, 'கூகுள்' என்ற ஜவுளிக்கடை, நாளை ஒரு நாள் மட்டும், '10 காசுக்கு, ஒரு டி ஷர்ட்' என, அறிவிப்பை வெளியிட்டுள்ளது.கடை உரிமையாளர் அமீன் கூறுகையில், ''தீபாவளியை முன்னிட்டும், பழமையை மக்களிடத்தில் ஞாபகப்படுத்தவும், இந்த வித்தியாசமான அறிவிப்பு. காலை, 11:00 மணிக்கு, முதலில் வரும், 200 பேருக்கு மட்டுமே, 10 காசுக்கு, ஒரு டி ஷர்ட் வழங்கப்படும். ஒருவருக்கு, ஒன்று தான் வழங்குவோம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
atara - Pune,இந்தியா
26-அக்-201906:28:13 IST Report Abuse
atara one has to get change of 10 paise coin that is the condition.
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
22-அக்-201914:36:04 IST Report Abuse
Anantharaman Srinivasan பத்து பைசா T shirt எப்படி நன்றாக இருக்கும். நல்ல கர்ச்சீப் கூட கொடுக்கமுடியாது... வெறும் விளம்பரம்....
Rate this:
Cancel
Raj - Chennai,இந்தியா
22-அக்-201913:17:17 IST Report Abuse
Raj இப்படிப்பட்ட அறிவிப்பை புறக்கணிக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X