கல்கி ஆசிரம ரெய்டில் சிக்கியது ரூ.600 கோடி!

Updated : அக் 22, 2019 | Added : அக் 22, 2019 | கருத்துகள் (42)
Advertisement
Kalki,IT raid,கல்கி,தினமலர்,dinamalar

சென்னை: தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள, கல்கி சாமியார் ஆசிரமங்களுக்கு சொந்தமான, 40க்கும் மேற்பட்ட இடங்களில், வருமான வரி துறையினர் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது. சோதனையில் கணக்கில் வராத சுமார் ரூ.600 கோடி மதிப்புள்ள ரசீதுகள், பணம், தங்கம் உள்ளிட்டவை சிக்கியதாக வருமான வரி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


சிக்கியது என்ன?


சென்னை, பெங்களூரூ, சித்தூர் நகரங்களில் 40 இடங்களில் 5 நாட்கள் நடைபெற்ற சோதனையில் சுமார் 600 கோடி ரூபாய் வரையிலான கணக்கில் காட்டாத வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரூ.44 கோடி ரொக்கம், 90 கிலோ தங்கம், ரூ.20 கோடி மதிப்பு வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், கல்கி ஆசிரமம் பினாமி பெயர்களிலும் சொத்துகளை வாங்கி குவித்துள்ளதாகவும் வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், வெளிநாடுகளில் மட்டும் கல்கி ஆசிரமம் ரூ.100 கோடி வரை முதலீடு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. துபாய், ஆப்பிரிக்கா, பிரிட்டீஷ் விர்ஜின் தீவுகளிலும் கல்கி ஆசிரமம் கணக்கில் காட்டாத முதலீடுகளை செய்துள்ளது. மேலும், சோதனையின்போது 4 ஆயிரம் ஏக்கர் அளவிலான நிலம் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


சம்மன்:

இது தொடர்பாக கல்கி சாமியார் மகன், மருமகள் ஆகியோர் இன்று(அக்.,22) காலை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பியுள்ளது. இந்நிலையில், மகன், மருமகள் இருவரும் உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
23-அக்-201908:38:48 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் நாத்திகர்கள் இறைநம்பிக்கையின்மையை தங்களுக்குள் வைத்துக்கொண்டு, நல்ல அற வழியில் நடப்பது சகஜம். அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்..
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
24-அக்-201901:39:43 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்ஆனா இந்த ஆத்திகர்கள் தான் கடவுளே இல்லைன்னு நிச்சயமாக நம்பி, கடவுளை நம்புறவங்களை ஏமாத்தி கல்லா கட்டுறாங்க.. முரட்டு பக்தின்னு முட்டாளாக்குறது, கடவுளையே காப்பாத்துறதுக்கு அடுத்தவனை கொல்லுறது எல்லாமே நம்ம பக்தால்ஸ் தான் இந்த போலிகளுக்கு ஒரு பாதுகாப்பு அரண். இந்த போலிகளை பத்தி கேள்வி கேட்டா ஒடனே பொத்துக்கிட்டு வரும் கோபம்.. பாவாடைகள், பச்சைகள் ஏமாத்துறதில்லையான்னு....
Rate this:
Share this comment
Cancel
R Gopalan - kampala,உகான்டா
22-அக்-201913:45:29 IST Report Abuse
R Gopalan எதை தின்னால் பித்தம் தெளியும் என்று மக்கள், பக்தர்கள் அள்ளி கொடுத்தால், கொடுத்தவன் குற்றமா இல்லை அதை வாங்கி வரி kattathavan குற்றமா.. .. பேதை நெஞ்சம் பட படக்குது.. தீவாளிக்கு டாஸ்மார்க்குக்கும் டார்கெட், அந்த கல்கி பகவானும் டார்கெட் வைத்து தன வசூல் வேட்டை செய்தாரோ...
Rate this:
Share this comment
Cancel
Balaji - Khaithan,குவைத்
22-அக்-201913:42:23 IST Report Abuse
Balaji கடவும் நம்பிக்கை உள்ளவர்கள் எதற்காக இதுபோன்று போலிகளிடம் போய் விழுகிறார்களோ தெரியவில்லை... நேரடியாக கடவுளை உருகி வேண்டினாலே நமது பிராத்தனைகள் இறைவனைப்போய் சென்றடையும்.. பரந்துவிரிந்த இந்தியாவில் இது தான் ஆகச்சிறந்த தொழிலாக மாறியிருப்பது வேதனை.. குற்றவாளிகள் உருவாக்கப்படுகிறார்கள் என்பது இதற்கு கனகச்சிதமாக பொருந்தும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X