ஊடுருவலை நிறுத்துங்கள் ; பாக்., குக்கு இந்தியா எச்சரிக்கை

Updated : அக் 22, 2019 | Added : அக் 22, 2019 | கருத்துகள் (7)
Share
Advertisement

புதுடில்லி : 'பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவ செய்யும் பாக்., ராணுவத்தின் சதி முயற்சிகள் தொடர்ந்தால், அதற்கு, இந்தியா தக்க பதிலடி தரும்' என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், எச்சரித்துள்ளார்.latest tamil newsஜம்மு - காஷ்மீரின் லடாக்கில் அமைந்துள்ள, ஷயோக் ஆற்றின் மீது, 1,400 அடி உயரத்தில், இந்திய ராணுவம், புதிதாக பாலம் கட்டியுள்ளது. கர்னல் சேவாங் ரின்சன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பாலத்தை, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது, நமக்கு நிறைய நண்பர்களை தான் தந்துள்ளதே தவிர, எதிரிகளை அல்ல.சீனாவுடன் இந்தியாவுக்கு, சுமுக உறவு உள்ளது.


latest tamil newsபிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபரை சந்தித்தபோது, காஷ்மீர் விவகாரம் குறித்து, சீனா தரப்பில், எதுவும் பேசப்படவில்லை. பாக்.,குக்கு எதிராக, அனாவசிய தாக்குதல்களை, இந்திய வீரர்கள் ஒருநாளும் நடத்தியது இல்லை. தேவையின்றி சீண்டுவதை, பாக்., வழக்கமாக கொண்டுள்ளது.


latest tamil newsஇந்திய எல்லைக்குள், பயங்கரவாதிகளை ஊடுருவ செய்யும் முயற்சிகளை, பாக்., படைகள் செய்து வருகின்றன. இதை இந்தியா பலமுறை தடுத்து நிறுத்தி உள்ளது.இந்தியாவுக்கு எதிரான இதுபோன்ற நடவடிக்கைகளை, பாக்., நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில், தகுந்த பதிலடி தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில், ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், லடாக்கை சேர்ந்த பா.ஜ., எம்.பி., ஜாம்யாங் ஸெரிங் நாம்க்யால் ஆகியோர் கலந்து கொண்டனர். சுற்றுலா பயணியருக்காகதிறக்கப்படுகிறது சியாச்சின்!இமாலயத்தில், காரகோரம் மலைத்தொடரின் கிழக்குப் பகுதியில், சியாச்சின் பனிச் சிகரம் அமைந்துள்ளது.

லடாக்கில் இருந்து, 60 கி.மீ., தொலைவில் உள்ள சியாச்சின், உலகின் மிக உயரமான போர்க்களமாக கருதப்படுகிறது.இந்த மலைச்சிகரம், சுற்றுலா பயணியருக்காக திறக்கப்பட உள்ளதாக, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இது குறித்து, தனது 'டுவிட்டர்' பக்கத்தில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது: லடாக் பகுதி, சுற்றுலாவுக்கு மிகவும் சிறந்த இடம். இங்கு சரியான போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டால், சுற்றுலா பயணியரின் வருகையை அதிகரிக்க முடியும்.


latest tamil newsசியாச்சின் மலை சிகரம், சுற்றுலா பயணியருக்காக திறக்கப்படுகிறது. சியாச்சின் ராணுவ முகாமில் இருந்து, குமார் போஸ்ட் என்ற இடம் வரை, பயணியர் சென்று வர அனுமதிக்கப்படுவர். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balaji - Khaithan,குவைத்
22-அக்-201914:55:15 IST Report Abuse
Balaji நம் ராணுவத்தினர் திறமையாக எதிர்த்தாக்குதல் மூலம் தக்க மூக்குடைப்பை பாக் வரம்பு மீறும் போதெல்லாம் உடனுக்குடன் வழங்கி வருகிறார்கள்...... அதனால் இதுபோன்று எச்சரிக்கை கொடுக்க வேண்டும் என்று இல்லை.......
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
22-அக்-201910:54:58 IST Report Abuse
Malick Raja ஒரு பாதுகாப்பு அமைச்சர் இப்படி சொல்வது இயலாமையை வெளிப்படுத்தும் என்பது கூட தெரியாமல் உளறுகிறார் .. (கூடுதலாக/ 60.வயதுக்கு மேலாகிவிட்டால் இதுபோன்ற நிதானமின்மை ஏற்படும் அதனால்தான் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுகிறார்கள்) ஒரு நாட்டிற்க்குள் ஊடுருவினால் அவர்களை சுட்டுக்கொன்றாலே யாரும் ஊடுருவ மாட்டார்கள்..ஊடுருவலை தடுக்க முடியாதவர்கள் மட்டுமே எச்சரிக்கை செய்வார்கள்.. நம் நாட்டு எல்லைக்குள் ஊடுருவினால் சுட்டு அவர்களின் உடல்களை அடுக்கி மொத்தமாக அனுப்பி வைத்தால் மட்டுமே நமது எல்லை கண்காணிப்பில் இருக்கிறது எனபதை உறுதிப்படுத்தும் பாதுகாப்பு மந்திரியை ஓய்வுக்கு அனுப்பலாம்.. மத்திய அரசாங்கம் ஒரே நாடு ஒரே சட்டம் ஒரே அட்டை என்றெல்லாம் பீத்துகிறது.. ஆனால் அரசு ஊழியர்கள் 60வயதுக்குமேல் ஓய்வு பெறவேண்டுமாம் .. அவர்களை கண்காணிக்கும் அரசியல் கட்சிமூலம் ஆட்சி நடத்துபவர்கள் கட்டையில் போகும் வரை பதவியில் இருப்பார்களாம் .. நல்லா இருக்குடா உங்கள் சட்டம் என்று அடிப்படை அறிவுள்ளவர்கள் சிந்திக்க வழிவகை ஏற்படுமே ..
Rate this:
Balaji - Khaithan,குவைத்
22-அக்-201915:03:20 IST Report Abuse
Balajiநமது ராணுவ வீரரின் தலையை அறுத்துக்கொண்டு போனபோது தங்களின் சார்பு கட்சி ஆட்சியில் ராணுவ மந்திரியாக இருந்தவர் பாக் ராணுவத்தினர் என்று கூட சொல்ல தைரியமில்லாமல் பாக் ராணுவ சீருடையில் வந்த தீவிரவாதி என்று சொன்னதும் இதே வயோதிகம் தான் காரணம் என்று எடுத்துக்கொள்ளலாமா????...
Rate this:
Cancel
venkatan - Puducherry,இந்தியா
22-அக்-201909:43:09 IST Report Abuse
venkatan இதுவரை ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த, பூகோள ரீதியாக,மறைத்து வைக்கப்பட்ட, அபாயாகரமான பிரதேசமாகவே இருந்து வந்திருக்கிறது. மக்கள் வசிக்க வசதி செய்யப்படாமல் பயனில்லா பூமி என்று கூறி பகைவனுக்கு தாரை வார்த்தது அந்தக்காலம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X