பொது செய்தி

இந்தியா

அதிநவீன ஏவுகணை; மத்திய அரசு தீவிரம்

Updated : அக் 22, 2019 | Added : அக் 22, 2019 | கருத்துகள் (11)
Advertisement

புதுடில்லி: மத்திய அரசு அமைப்பான, டி.ஆர்.டி.ஓ., எனப்படும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, அதிநவீன, 'ஹைபர்சானிக்' ஏவுகணை தயாரிக்கும் முயற்சியில் களம் இறங்கியுள்ளது.


பிரதமர் மோடி தலைமையிலான அரசு, இரண்டாவது முறையாக பதவியேற்றதிலிருந்து, ராணுவத்தை பலப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதன் ஒரு பகுதியாக, அடுத்த தலைமுறை ஆயுதம் என, போற்றப்படும், அதி நவீன, 'ஹைபர்சானிக்' ஏவுகணைகளை தயாரிக்கும் முயற்சியில், டி.ஆர்.டி.ஓ., இறங்கியுள்ளது. இதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தும் பணியை, ராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங் விரைவில் துவக்கி வைக்கவுள்ளார்.

இந்த ஏவுகணை, ஒலியை விட நான்கு மடங்கு வேகமாக செல்லக்கூடியதாக இருக்கும். மேலும், தற்போது புழக்கத்தில் உள்ள எந்த ஏவுகணையாலும், இதை தாக்கி அழிக்க முடியாது. சீனா, ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகள் மட்டுமே, இந்த வகை ஏவுகணைகளை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
22-அக்-201918:22:12 IST Report Abuse
natarajan s திரு நம்பி நாராயணனை பற்றி தெரியாதவர்கள் அவர் தவறு செய்து விட்டதாக பதிவிடுகிறார்கள் . அவரால்தான் நமக்கு VIKAS என்ஜின் கிடைத்தது (ஒரிஜினல் VIKING rocket of France ) அவர் இருந்திருந்தால் பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த சந்திராயன் mission முடிந்திருக்கும் . நமது நாட்டின் விண்வெளி ஆராய்ச்சிக்கு தடை போட நடத்தப்பட்ட வெளிநாட்டு சதி அவர் மீது வழக்கு. அதெற்கு அப்போது கேரளாவில் இருந்த கருணாகரனின் அரசும் உடந்தை. ஒரு தமிழன் ISRO chairman ஆவதை தடுக்க , மலையாளிகள் (திரு கஸ்தூரி ரங்கனும்) நடத்திய தாக்குதல்தான் இது .அந்த நிகழ்வை கவனித்தால் திரு மாதவன் நாயரை கொண்டு வருவதற்காக நடத்தப்பட்ட நாடகம் அது. அந்த சமயத்தில் CBI யை எதிர்த்து ISRO முழுமையும் திரு நம்பிநாராயணனுக்கு ஆதரவாக இருந்தது. முடிவில் அது பொய் வழக்கு என்று CBI closure report கொடுத்தது. அதெற்குதான் இவருக்கு Supreme Court ரூபாய் 50 லட்சம் நஷ்ட ஈடு கொடுக்க உத்தரவுவிட்டது. (இவர் அப்போதிருந்த காவல்துறை அதிகாரிகளை பொய் வழக்கு போட்ட காரணத்திற்காக தண்டிக்க வேண்டும் என்று ஒரு வழக்கு போட்டுள்ளார் )அந்த முடிவு வருவதெற்குள் காலம் கடந்துவிட்டபடியால் இவருக்கான பதவி உயர்வு கிடைக்காமல் போய்விட்டது. அதனாலதான் இவரை Future Space Programme என்ற ஒரு project ஏற்படுத்தி அதன் தலைவராக போட்டார்கள் . அதுதான் தற்போது சந்திராயன் என்று ஏவப்பட்டது. வழக்கு நிலுவையில் இருந்தததில் இவருக்கான சரியான அங்கீகாரம் கொடுக்க முடியாத காரணத்தினால்தான் திரு மயிலசாமி அதன் project director ஆக இருந்தார். அதன்பின் இவரது முயற்சிக்கு அங்கீகாரம் கொடுக்க பத்மபூஷன் கொடுக்கப்பட்டது. அரசியல் தலையீடு ஆராய்ச்சி துறைகளில் இல்லாமல் இருந்தால் நாம் இன்னும் நிறைய கண்டுபிடித்து இருப்போம் (உதாரணம் BRAHMOS அது ஒரு தனி நிறுவனம் என்று ஏற்படுத்தி வடிவமைக்கப்பட்டது ) . Brain drain தவிர்க்கப்பட்டு இருக்கும் .
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
22-அக்-201915:39:29 IST Report Abuse
mindum vasantham இந்த ஏவுகணை தேவை ஏனென்றால் சீனாவிடம் உள்ளது
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
22-அக்-201910:23:15 IST Report Abuse
pattikkaattaan ஒரு பக்கம் இந்த மாதிரி செய்திகள் வந்து நம்பிக்கையை கொடுத்தாலும் , தொடர்ந்து வெளிநாடுகளிலிருந்து பெரும் தொகைக்கு ஆயுதங்கள் கொள்முதல் செய்யப்படுவது கவலையளிக்கிறது .. நம் நாட்டில் இன்னும் ஆராய்ச்சிகளுக்கு அதிக தொகை செலவழித்து, விஞ்ஞானிகளை ஊக்குவிக்கவேண்டும்( எல்லா துறைகளிலும்) .. நம் மாணவர்கள் உயர்கல்வியில் வெறும் புத்தகங்களை மட்டுமே படித்து தேர்வு எழுதுவதால், practical and reality போன்றவற்றில் சரியான அறிவு இன்றி பின்தங்கியுள்ளனர் .. ஓட்டுக்காக இலவசத்திற்கு செலவழிக்கும் தொகையை நாட்டின் முன்னேற்றத்திற்கு செலவழித்தால் வருங்கால சமூகம் வளமாக இருக்கும் ..
Rate this:
Share this comment
blocked user - blocked,மயோட்
22-அக்-201914:49:32 IST Report Abuse
blocked userஓட்டுப்போடுவது உருளைக்கிழங்கை தங்கமாக்கும் தொழில்நுணுக்கம் வைத்திருக்கும் வின்சிக்கு. ஆனால் கேட்பது மட்டும் உள்ளூரிலேயே தயாரிக்கவேண்டும். ஞாயமா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X