பொது செய்தி

தமிழ்நாடு

வரும் 30ல் வேலைவாய்ப்பு முகாம்

Added : அக் 22, 2019
Share
Advertisement
சென்னை : மண்டல வேலை வாய்ப்பு உதவி அதிகாரி, சுஜித் குமார் சாஹூ வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான, மத்திய அரசின், தேசிய வாழ்க்கை போக்கு சேவை மையம், சென்னை சாந்தோமில் செயல்படுகிறது. இந்த மையம், ஒர்க்பிரீக்ஸ் கார்ப்பரேட் நிறுவனத்துடன் இணைந்து, வேலைவாய்ப்பு முகாமை, சென்னையில், 30ம் தேதி நடத்துகிறது.பி.பி.ஓ,, வங்கி பிரிவு, காப்பீட்டு பிரிவு, மின்னணு

சென்னை : மண்டல வேலை வாய்ப்பு உதவி அதிகாரி, சுஜித் குமார் சாஹூ வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான, மத்திய அரசின், தேசிய வாழ்க்கை போக்கு சேவை மையம், சென்னை சாந்தோமில் செயல்படுகிறது. இந்த மையம், ஒர்க்பிரீக்ஸ் கார்ப்பரேட் நிறுவனத்துடன் இணைந்து, வேலைவாய்ப்பு முகாமை, சென்னையில், 30ம் தேதி நடத்துகிறது.

பி.பி.ஓ,, வங்கி பிரிவு, காப்பீட்டு பிரிவு, மின்னணு வணிகம், கல்வி, தகவல் தொழில்நுட்பம், விளம்பரத் துறை உட்பட, பல்வேறு பிரிவுகளில், தனியார் நிறுவனங்களில், புதிய மற்றும் அனுபவமிக்கவர்களுக்கு, வேலை வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன.மாதம், 10 ஆயிரம் முதல், 30 ஆயிரம் ரூபாய் வரை, சம்பளம் வழங்கப்படும். 22 முதல், 35 வயதிற்கு உட்பட்டோர், இந்த முகாமில் பங்கேற்கலாம். பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பிளஸ் 2 முடித்தவர்களுக்கும் வாய்ப்பு உண்டு.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மட்டுமல்லாமல், பொதுப்பிரிவை சேர்ந்தவர்களும் இதில் பங்கேற்கலாம். இதில் பங்கேற்க விரும்புவோர், www.workfreaks.in/applyjob என்ற, இணையதள முகவரியில், 28ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள், நேரடியாக வந்து பதிவு செய்யலாம்.ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான தேசிய வாழ்க்கை போக்கு சேவை மையம், சாந்தோம் நெடுஞ்சாலை, சென்னை - 4 என்ற முகவரியில், வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X