முத்தலாக் சட்டத்தின் ஷரத்துக்கு எதிராக மனு

Updated : அக் 22, 2019 | Added : அக் 22, 2019 | கருத்துகள் (32)
Share
Advertisement

புதுடில்லி: முஸ்லிம் மதத்தை சேர்ந்த ஆண்கள், தங்கள் மனைவியை, மூன்று முறை, 'தலாக்' கூறி, விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடை விதிக்கும் சட்ட திருத்த மசோதா, பார்லியில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, இந்த சட்டம், நடைமுறைக்கு வந்தது.



latest tamil news



இந்நிலையில், அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், இச்சட்டத்தில் உள்ள குற்றவியல் ஷரத்துக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில், நேற்று(அக்.,21) மனு தாக்கல் செய்தது.'முத்தலாக் என்பது, முஸ்லிம்களின் தனிப்பட்ட சட்டம். அதில் தலையிட, அரசியல் சாசனத்துக்கு அனுமதி இல்லை.


latest tamil news



இச்சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படுபவர் மீது, உடனடியாக குற்றவியல் நடவடிக்கை பாய்கிறது. இது, முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்களின், தனிநபர் சுதந்திரத்தை பறிக்கிறது' என, மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
HSR - MUMBAI,இந்தியா
22-அக்-201917:29:25 IST Report Abuse
HSR சரிப்பா நமக்குள்ள ஆயிரம் கருத்து வேறுபாடு ஒற்றுமை இருக்கலாம். ஒரே ஒரு சந்தேகத்தை இங்கே யாராவது தீர்த்து வைக்க முடியுமா? முதலில் மத சார்பற்ற நாடு என்றால் என்ன? மதச் சார்புள்ள நாடு என்றால் என்ன? ஏன் கேட்கிறேன் என்றால் ஒரு மதச் சார்புள்ள நாடு ஒரு மதத்தின் கோட்பாடுகளால் மட்டுமே சட்டத்தை வடிவமைத்த நாடு என்று கொண்டால் மதச்சார்பற்ற நாடு என்றால் எந்த மதத்தின் சட்டங்களும் இல்லாமல் பொதுவாக எல்லா மக்களுக்கும் உரிய சட்டம் அதாவது எந்த மதத்தை பின்பற்றும் சட்டம் இல்லாமல் எல்லோருக்கும் ஒரே சட்டம் என்றுதானே இருக்க வேண்டும். அப்படியானால் நம் நாடு முஸ்லீம் மதத்திற்கு ஒரு சட்டம் இந்து மதத்திற்கு ஒரு சட்டமும் கிறிஸ்துவ மதத்திற்கு ஒரு சட்டம் என்று இருக்குமானால் இது மதங்கள் சார்ந்த நாடு என்றுதானே பொருளாகிறது.? மதச்சார்பற்ற நாடு எனும்போது மரங்களை வைத்து ஏன் சட்டமியற்ற வேண்டும்? யாராவது விளக்கம் தர முடியுமா ஆவலுடன் காத்திருக்கிறேன். நன்றி. வணக்கம்
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
22-அக்-201916:47:13 IST Report Abuse
Endrum Indian "முஸ்லிம்களின் தனிப்பட்ட சட்டம். அதில் தலையிட, அரசியல் சாசனத்துக்கு அனுமதி இல்லை". இதை உச்ச நீதிமன்றம் ஆமோதித்து ஆகவே முஸ்லிம்கள் அனைவரும் இந்தியாவை விட்டு தங்கள் நாட்டுக்கு செல்லுமாறு ஆணையிடுகின்றது என்று தீர்ப்பு கொண்டு வரவேண்டும்.
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
22-அக்-201916:23:42 IST Report Abuse
konanki இந்த வாரியத்தின் தலைவர் யார் ? இந்த வாரியத்தில் அங்கத்தினராக / நிர்வாக அமைப்பில் முஸ்லீம் பெண்கள் உண்டா ? இந்த வாரியத்தின் தலைவராக எப்போதாவது ஒரு முஸ்லீம் பெண் இருந்தது உண்டா ? இந்த வாரியத்தின் உச்ச நிர்வாகத்தில் உள்ள பெண்களின் ஒப்புதலுடன் இந்த மனு தாக்கல் செய்ய பட்டு உள்ளதா ? மொத்தத்தில் முஸ்லீம் பெண்கள் இந்த முத்தலாக் சட்டதை பெரிதும் வரவேற்று உள்ளனர். இந்த மனு கண்டிப்பாக முஸ்லீம் பெண்களின் நலனுக்கு எதிரானது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X