சிதம்பரத்துக்கு ஜாமின் கிடைக்குமா?

Updated : அக் 22, 2019 | Added : அக் 22, 2019 | கருத்துகள் (16)
Advertisement

புதுடில்லி: 'ஐ.என்.எக்ஸ். மீடியா' முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது, இன்று(அக்.,22) தீர்ப்பு அளிக்கப்படுகிறது. அவர் மீதான குற்றப்பத்திரிகையை ஏற்பதாக டில்லி சிறப்பு நிதிமன்றம் அறிவித்துள்ளதால், அவருக்கு ஜாமின் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.






ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் ஆகஸ்டில் கைது செய்தனர். சிதம்பரம் தற்போது டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிதம்பரம் அவரது மகன் கார்த்தி ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தின் உரிமையாளர் பீட்டர் முகர்ஜி உள்ளிட்டோர் மீது டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. சார்பில் சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.


குற்றப்பத்திரிகை ஏற்பு


சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹார் முன் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது சிதம்பரம் உள்ளிட்டோருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு தங்களிடம் ஆதாரம் இருப்பதாக சி.பி.ஐ. தரப்பில் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சிதம்பரம் மீதான குற்றப்பத்திரிகை ஏற்கப்பட்டதாக நீதிபதி அறிவித்தார். நாளை மறுநாள் நீதிமன்றத்தில் சிதம்பரம் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இதேபோல் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கார்த்தி உள்ளிட்ட மற்றவர்கள் நவ.29ல் ஆஜராக 'சம்மன்' அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டார்.






ஜாமின் கிடைக்குமா?


ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிதம்பரம் ஜாமின் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை முடிவடைந்ததை அடுத்து, மனு தொடர்பாக இன்று தீர்ப்பளிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
22-அக்-201910:18:20 IST Report Abuse
Sampath Kumar கிடைக்காது , கிடைக்காது தீபாவளி ஜெயிலில் தான்
Rate this:
Share this comment
Cancel
krishna - chennai,இந்தியா
22-அக்-201909:32:43 IST Report Abuse
krishna இவனோட கேஸ் மட்டும் உடன் உடன் ஏன் விஜாரிக்கிறார்கள்.மற்ற கேஸ் எல்லாம் வருஷத்துக்கு ஒன்னு இல்லை இரண்டு முறை மட்டுமே வரும்.இவனையும் மொத்த குடும்பத்தையும் சாகும் வரை திஹாரில் போட்டால்தான் இந்த நாடு உருப்படும்.இவனால் தமிழ் நாட்டுக்கோ சிவகங்கைக்கோ ஒரு பிரயோஜனமும் இல்லை.என்ன ஆட்டம் போட்டான் பதவில இந்தப்பூ.தேச விரோதம் கொள்ளை எல்லாம் செய்துள்ளான்.இன்னும் எப்படி வெக்கமே இல்லாம சிரிக்கறான்.எனக்கு தெரிஞ்ச இரண்டு போலீஸ் இருக்கானுங்க.பத்து நிமிஷம் விட்ட போதும்.எல்லா உண்மையும் கக்கிடுவான்.இவனை விட இவன் மகனுக்கு திமிர் அதிகம்.மகனை MP ஆக்கிய முட்டாள் மக்களுக்கு என்ன சொல்வது.
Rate this:
Share this comment
Cancel
Rajan - Bangalore,இந்தியா
22-அக்-201908:48:56 IST Report Abuse
Rajan கடல்லயே இல்லயாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X