அரசியல் செய்தி

தமிழ்நாடு

நாங்குநேரியில் ரூ.100 கோடி புழக்கம்!

Updated : அக் 22, 2019 | Added : அக் 22, 2019 | கருத்துகள் (24)
Share
Advertisement

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தேர்தலில் சுவராஸ்யமான சம்பவங்கள் நடந்தன. தேர்தல் தினத்தன்றும் ஜோராக பணப்பட்டுவாடா நடந்தது. அங்கு மட்டும் ரூ.100 கோடி புழக்கத்திற்கு வந்திருக்கலாம் என உளவுத்துறையினர் கணக்கெடுத்துள்ளனர்.latest tamil newsநாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் நேற்று(அக்.,21) நடந்தது. நாங்குநேரி தொகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் தேவேந்திரகுல வேளாளர் எனப்படும் பட்டியல் இனமக்கள் வசிக்கின்றனர். அவர்கள் அரசாணை கோரி தேர்தலை புறக்கணித்ததால், ஓட்டுப்பதிவில் மந்தம் ஏற்பட்டது. வழக்கமாக 70 சதவீத ஓட்டுப்பதிவு நடக்கும் நாங்குநேரியில் 66.10 சதவீத ஓட்டுப்பதிவே நடந்தது. இதனால் நேற்று இடைத்தேர்தல் நடந்த விக்கிரவாண்டி, புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதிகளை விட ஓட்டுப்பதிவு சதவீதம் குறைவாக இருந்ததோடு மந்தமாகவும் இருந்தது.

நாங்குநேரி தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி தொகுதிக்குள் முகாமிட்ட காங்கிரஸ் கட்சி எம்.பி.,வசந்தகுமார், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். ஆனால் அ.தி.மு.க.,வின் ராஜ்யசபா எம்.பி.,விஜிலாசத்யானந்த், காரில் வந்து பரப்பாடி அருகே இலங்குளம் கிராமத்தில் வாக்காளர்களை சந்தித்தார். அங்கேயே அமர்ந்திருந்தார். எனவே அங்கு வந்த காங்கிரசார் அவர் மீதும் வழக்குபதிவு செய்ய வலியுறுத்தி அங்கேயே சாலை மறியலில் ஈடுபட்டனர். இருப்பினும் போலீசார் வழக்குபதிவு செய்யவில்லை.


latest tamil news
பணப்பட்டுவாடா:


தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்ட தேவேந்திரகுல வேளாளர் அமைப்பினர், சீவலப்பேரியில் ஓட்டுபோட வந்த சிலருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வெளியூர்ளை சேர்ந்த அவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப் படுத்தினர். நாங்குநேரி தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பது ஆரம்பத்தில் இருந்தே நடந்தது. ஆளுங்கட்சி தரப்பில் ஓட்டுக்கு ரூ.2,000, காங்கிரஸ் தரப்பில் ரூ.1000 தரப்பட்டதாக பரஸ்பரம் புகார்கள் கிளம்பின. நேற்று தேர்தல் தினத்திலும் வாக்காளர்களுக்கு பணம் வினியோகிக்கப்பட்டது.


ரூ.100 கோடி:


ஒட்டுமொத்தத்தில் நாங்குநேரி இடைத்தேர்தலில் மட்டும் ரூ.100 கோடி புழக்கத்திற்கு வந்திருக்கலாம் என உளவுத்துறையினர் கணக்கெடுத்துள்ளனர். நாங்குநேரி பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அ.தி.மு.க., பிரமுகரான சென்னையை சேர்ந்த சத்தியேந்திரன் என்பவரிடம் இருந்து ரூ. ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 740 பறிமுதல் செய்யப்பட்டது. இவர் வெளிமாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஒருவரின் உறவினர்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
23-அக்-201916:13:26 IST Report Abuse
இந்தியன் kumar எந்த மாநிலத்திலும் இல்லாதது தமிழர்கள் அனைவரும் வெட்கப்படவேண்டும் ( நானும் தமிழன்தான் )
Rate this:
Share this comment
Cancel
22-அக்-201918:35:16 IST Report Abuse
ஸாயிப்ரியா தேர்தல் வந்தால் எங்கெங்கும் பொன்மகள் வந்தாள் தான். கனவல்ல நிஜம். வந்தே மாதரம்.
Rate this:
Share this comment
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
22-அக்-201915:20:10 IST Report Abuse
M.COM.N.K.K. தேர்தலில் பணம் கொடுப்பதை இனி தடுப்பது கொஞ்சம் கஸ்ட்மானகாரியம்தான் வேட்பாளர்களும் வாக்காளர்களும் ருசி கண்ட பூனையாக மாறிவிட்டார்கள்.இதற்கு ஒரே வழிதான் பணம் கொடுப்பதை கண்டுகொள்ளாமல் இருந்தால் அரசியலில் கொள்ளையடித்த மக்களின் பணம் மீண்டும் மக்களிடமே சேர்ந்துவிடுமல்லவா ஆனால் இதற்கு நமது சட்டம் இடம் கொடுக்காதே.பணம் கொடுப்பதை கண்டுகொள்ளாமல் இருந்தால் தவறுதான் அதே நேரத்தில் கொள்ளையடித்த பணம் மீண்டும் மக்களிடமே சேரும் .இதற்கு நல்ல தீர்வை தேர்தல் ஆணையம்தான் முடிவுசெய்யமுடியும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X