அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரஜினி பா.ஜ.,வில் சேர பொன்.ராதா அழைப்பு

Added : அக் 22, 2019 | கருத்துகள் (23)
Advertisement
B.J.P,BJP,Bharatiya Janata Party,Rajini,Rajinikanth,பா.ஜ,ரஜினி,ரஜினிகாந்த்,dinamalar,தினமலர்

புதுக்கோட்டை: ''ரஜினி அரசியலுக்கு வந்து, பா.ஜ.,வில் சேர வேண்டும் என்பது என் விருப்பம்,'' என, முன்னாள் மத்திய அமைச்சர், பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில், நேற்று அவர் அளித்த பேட்டி: பஞ்சமி நிலம் மற்றும் அரசு நிலத்தை யார் ஆக்கிரமித்திருந்தாலும், அதை திரும்ப அரசிடம் ஒப்படைக்க வேண்டும். தி.மு.க., பலமுறை ஆட்சியில் இருந்த கட்சி என்பதால், அவர்கள் ஒன்றும் இதற்கு விதிவிலக்கல்ல. நடிகர் ரஜினிகாந்த், கட்சி தொடங்கினால், அதை நான் வரவேற்கிறேன். ஆனால், அவர் பா.ஜ.,வில் சேர வேண்டும் என்பதே என் விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.



புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கினால் வரவேற்பேன். ஆனால் அவர் பாஜகவில் சேரவேண்டும் என்றார். மேலும், அவர் சூப்பர் ஸ்டார்; எதையும் ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுக்கக்கூடியவர் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B Srinivasan - trichy,இந்தியா
22-அக்-201920:44:06 IST Report Abuse
B Srinivasan தான் கெட்டதும் இல்லாமல் அடுத்தவனுக்கும் குழி பறிப்பது இதுதான். பாவம் அவர் இன்னும் ஒரு பத்து படத்தில் நடித்துவிட்டு அமைதியாக வாழ்வார். அவருக்கும் அரசியலுக்கும் ஒத்தே வராது. சிவாஜி சார் திருவையாறில் பட்ட பாடு எல்லாருக்கும் தெரியும்.
Rate this:
Share this comment
Cancel
Sridhar Rengarajan - Trichy,இந்தியா
22-அக்-201915:01:50 IST Report Abuse
Sridhar Rengarajan ரஜினி நோகாம நொங்கு தின்ன ஆசைப்பட்டால் பாஜகவில் இணைவதே நல்லது. இங்கு எவ்ளோ பிரச்சினை இருந்தாலும் அதிமுக திமுக இரண்டும் பலமான வாக்கு வங்கிகள் உள்ள கட்சிகள். தவிர பாமகவுக்கு என்று கணிசமான ஒரு வாக்கு வங்கி உண்டு. அதை சிதைப்பது என்பது கடினம். ரஜினி கைக்காசை எடுத்து செலவு செய்து தனியா நின்றால் அதிகபட்சம் பத்து முதல் பதினைந்து பர்சென்ட் வாங்கலாம். அவ்ளோதான். அதுவே பாஜகவில் இணைந்து நின்றால் கல்லாப்பெட்டியில் கைவைக்காமல் தமிழக பாஜக தலைவர் மற்றும் முதலமைச்சர் வேட்பாளர் என்ற தகுதியோடு தேர்தலில் போட்டியிடலாம். மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் போன்றவர்கள் காய்நகர்த்தினால் ரஜினிக்கு சி.எம் சீட் சாத்தியம்.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
22-அக்-201913:17:01 IST Report Abuse
இந்தியன் kumar கொள்கைகள் ஒன்றாக இருக்கலாம் ஆனால் ஆளுமை என்பது வேறு. ரஜினி தனி ஆளுமை. அமித்ஷா சொல்லி ரஜினி நடக்கவேண்டும் என்கிற தேவை இல்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X