பொது செய்தி

இந்தியா

வங்கி ஊழியர்கள் 'ஸ்டிரைக்'; சேவைகள் முடங்கின

Updated : அக் 22, 2019 | Added : அக் 22, 2019 | கருத்துகள் (23)
Advertisement
Bank,strike,Operations,affected,வங்கி,ஊழியர்கள்,ஸ்டிரைக்,வங்கி சேவை,dinamalar,தினமலர்

புதுடில்லி: பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் முடிவை கைவிடக்கோரி, அகில இந்திய அளவில் இன்று(அக்.,22) வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் 35 ஆயிரம் பேர் உட்பட, இந்திய அளவில் 3 லட்சம் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதனால் வங்கி சேவைகள் முடங்கின.





தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளை இணைக்க வேண்டும் என்ற முயற்சியை, மத்திய அரசு மேற்கொண்டு, அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 10 பொதுத்துறை வங்கிகளை இணைத்து 4 வங்கிகளாக மாற்ற மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதற்கு வங்கி ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து இன்று(அக்.,22) ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்தது. இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில், மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தை, தோல்வி அடைந்தது.







முடங்கின


இதனையடுத்து, இன்று திட்டமிட்டபடி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் 35,000 பேர் உட்பட நாடு முழுவதும் 3 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் நாடு முழுவதும் வங்கிப் பணிகள் முடங்கின.







Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B Srinivasan - trichy,இந்தியா
22-அக்-201921:13:24 IST Report Abuse
B Srinivasan இது பொதுமக்களுக்கான போராட்டம். எந்த வங்கியிலும் யாரும் தூங்கிகொண்டுஇல்லை. வாழ்க்கைக்கு போராடிக்கொண்டு மக்களுக்கும் சேவைசெய்துகொண்டு அரசியல்வாதிகளையும் சமாளித்துக்கொண்டு கடன் திரும்பிசெலுத்தாதவர்களையும் சமாளித்துக்கொண்டு மெமோக்களையும் வாங்கிக்கொண்டு சாகிறான். இதில் எட்டு வாங்கி பத்து வங்கி என்று சேர்த்தால் யார் எவளவு கட்ட வேண்டும் என்று கண்டுபிடிப்பதற்குள் கடன் வாங்கியவன் மயமாகிவிடுவான். சம்மந்தமே இல்லாதவன் மெமோ வாங்குவான் ஒவ்வொரு வங்கியும் தனி தனி செயல்பாட்டில் இருக்கிறது.ஒன்று சேர்த்தால் எல்லாம் நாசமாகி விடும். ஸ்டேஷனரிஸ் நஷ்டம் . எல்லாம் எவன் தலையில் விடியும்? இரண்டு பக்கமும் பேசி முடிவு செய்யவேண்டிய விஷயம்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan - Madurai,இந்தியா
22-அக்-201917:35:21 IST Report Abuse
Srinivasan வங்கி இணைப்பு தற்போது உள்ள ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படாது மாறாக புதிய நியமனங்கள் / வேலை வாய்ப்பு ஏற்படாது... அதனால் தான் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்... மற்றும் பல கோரிக்கை உட்பட...
Rate this:
Share this comment
Cancel
22-அக்-201917:17:19 IST Report Abuse
ஆப்பு இப்போதைக்கு ஆள்குறைப்பு இல்லைம்பாய்ங்க. யாராவது ரிடையர் ஆயி வீட்டுக்குப் போனா புதுசா ஆள் எடுக்க மாட்டாய்ங்க. போராட்டம் இன்னையப் பத்தியதல்ல.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X