பொது செய்தி

இந்தியா

'நான்-வெஜ்' சாப்பிடும் கால்நடைகள்: பா.ஜ., அமைச்சர்

Updated : அக் 22, 2019 | Added : அக் 22, 2019 | கருத்துகள் (23)
Advertisement

பனாஜி: கோவாவில், சாலையில் இருந்து மீட்கப்பட்ட கால்நடைகள், அசைவ உணவுகள் உண்பதாக, அம்மாநில அமைச்சர் மைக்கேல் லோபோ தெரிவித்தார்.






கோவாவில் உள்ள, அர்போரா கிராமத்தில், நடந்த நிகழ்ச்சியில், அம்மாநில அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, மைக்கேல் லோபோ பேசியதாவது: கோவாவில் உள்ள காலாங்கட் மற்றும் கேண்டோலிம் ஆகிய பகுதிகளில், சாலையில் சுற்றித் திரிந்த, 76 மாடுகளை மீட்டு, கோ சாலையில் சேர்த்தோம். அந்த மாடுகளுக்கு, புற்கள், வைக்கோல், பருத்தி கொட்டை, புண்ணாக்கு போன்ற உணவுகள் அளித்தபோது, அவை சாப்பிடவில்லை.





இந்த கால்நடைகள், ஓட்டல்களில் இருந்து கொட்டப்படும் கோழி மற்றும் மீன் கழிவுகளை உண்டு பழக்கப்பட்டு விட்டதால், அவை அசைவ உணவு விரும்பிகளாக மாறி இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக, கால்நடை மருத்துவர்களின் உதவியை நாடியுள்ளோம். அவர்கள் வந்து சிகிச்சை அளிப்பதாக கூறியுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-அக்-201921:50:01 IST Report Abuse
ஆப்பு ஏண்.மனுசங்க மட்டும்தான் எங்களைச் சாப்புடணுமா? நாங்களும் சாப்புட்டு வேகமா வளருவோம்...
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
22-அக்-201915:32:37 IST Report Abuse
Endrum Indian அதுவும் எப்படி சிக்கென் 65, சிக்கென் டிக்கா, மட்டன் குருமா மிச்ச சொச்சங்கள்
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
22-அக்-201915:00:41 IST Report Abuse
skv srinivasankrishnaveni நான் வெஜ் தின்னாப்பாலைக்கும் பெற்றோர்களையும் ப்பார்த்துருக்கேன் அவப்பிள்ளைகள் எங்கவீட்டுலே செய்யும் வத்தக்குழம்பு மோர்குழம்புக்கு அவ்ளோ அடிக்ட் ஆனவங்க சிலர் சைவமாகவே மாறியதும் இருக்கே அதேபோலத்தான் பசுக்கள் எதையும் தீவனமா துண்ணும் இயல்புடன் இருக்காம் பாலிலில்கூட ஸ்மெல் வரும் டி காபியும் கூட கலப்பாதுகாஷ்டம்னு சிலர் கூறுவாங்க
Rate this:
Share this comment
Gopinathan S - chennai,இந்தியா
22-அக்-201916:17:45 IST Report Abuse
Gopinathan Sஎன்ன சொல்ல வரீங்க?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X