சென்னை : தமிழகத்தின் வட மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் , காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. மாவட்டத்தில் பூண்டி, மாதவரம், சோழவரம், மீனம்பாக்கம், பல்லாவரம், கோயம்பேடு, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அண்ணாநகர்,வடபழனி குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள் பகுதிகளில் சில இடங்களிலும் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, புழல், செங்குன்றம் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கவும் வாய்ப்பு உள்ளது எனவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.