பொது செய்தி

தமிழ்நாடு

3 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Updated : அக் 22, 2019 | Added : அக் 22, 2019
Share
Advertisement
ஊட்டி : கனமழை காரணமாக, ராமநாதபுரம், சேலம், நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (அக்.,22) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. பலத்த மழை பெய்யும் சில மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக

ஊட்டி : கனமழை காரணமாக, ராமநாதபுரம், சேலம், நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (அக்.,22) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.



latest tamil news




தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. பலத்த மழை பெய்யும் சில மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் பாதிப்படைந்துள்ளன. இதனால் இன்று (அக்.,22) இம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.

இது போல் கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் அறிவித்துள்ளார்.


latest tamil news




தொடர் மழை காரணமாக சேலத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து, கலெக்டர் ராமன் உத்தரவிட்டுள்ளார்.


காரைக்கால்:


கனமழையால் காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.



சென்னையில்...



சென்னை, மற்றும் திருவள்ளூரில் இன்று வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X