அரசியல் செய்தி

தமிழ்நாடு

'மாஜி' எம்.பி., எம்.எல்.ஏ.,க்களுடன் 10,000 பேர் பா.ஜ.,வில் சேர்ப்பு?

Updated : அக் 22, 2019 | Added : அக் 22, 2019 | கருத்துகள் (52)
Advertisement

அ.தி.மு.க., - தி.மு.க., - அ.ம.மு.க., - த.மா.கா.,வில் உள்ள 'மாஜி' எம்.பி. - எம்.எல்.ஏ.,க்கள் 13 பேர் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என 10 ஆயிரம் பேரை பா.ஜ., தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலையில் அக்கட்சியில் சேர்க்கும் ஏற்பாட்டை தமிழக பா.ஜ. செய்து வருகிறது.






சமீபத்தில் மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஸீ ஜின்பிங் பிரதமர் மோடி சந்திப்புக்கு பின் பா.ஜ.,வுக்கு தேசிய அளவில் மட்டுமின்றி தமிழகத்திலும் செல்வாக்கு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இரண்டு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக பா.ஜ., தலைமையில் புதிய அணியை உருவாக்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் தொலைநோக்கு திட்டங்களுடன் செயல்படுகின்றனர். இரு தலைவர்களின் எண்ண ஓட்டத்திற்கு ஏற்ப வேகமாக செயல்படுவரை தமிழக பா.ஜ. தலைவராக நியமிக்கவும் கட்சியின் உயர்மட்டக் குழு விரும்புகிறது.

இதற்கிடையில் அ.தி.மு.க., - தி.மு.க., - அ.ம.மு.க., - த.மா.கா., உள்ளிட்ட கட்சிகளில் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் 13 பேர் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகளை வளைக்க தமிழக பா.ஜ. பொதுச்செயலர் நரசிம்மன் தலைமையிலான குழு தீவிரம் காட்டி வருகிறது. இந்த குழுவில் மத்திய அமைச்சர்களிடமும் அமித்ஷாவிடமும் நெருக்கமாக இருக்கும் முக்கிய பிரமுகர்கள் இடம் பெற்றுள்ளனர்.





விழுப்புரம் அரியலுார் திருச்சி நாகர்கோவில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 'மாஜி'க்களுடன் முதல் கட்ட பேச்சு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் மாற்று கட்சியினர் இணைப்பு விழா நடத்த அமித்ஷாவிடம் அனுமதி கேட்டு கடிதம் எழுதப்பட்டு உள்ளது. மஹாராஷ்டிரா ஹரியானா தேர்தல் முடிவுக்கு பின் அம்மாநிலங்களில் அமைச்சரவை அமைந்த பின் இணைப்பு விழாவிற்கு அமித்ஷா இசைவு தெரிவிப்பார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
23-அக்-201903:13:05 IST Report Abuse
Rajagopal கட்சி தாவி வருகின்றவர்களை வைத்து மீண்டும் சேதுவில் பாலம் கட்டுவோம் என்று பாஜக அணியின் தலைமை முடிவு செய்திருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
amit -  ( Posted via: Dinamalar Android App )
22-அக்-201921:46:22 IST Report Abuse
amit இதெல்லாம் சும்மா ! ஷோவுக்குதான்!எங்களுக்கு மெஷின் இரூக்குல
Rate this:
Share this comment
Cancel
Raffik - Chennai,இந்தியா
22-அக்-201919:13:50 IST Report Abuse
Raffik சமீபத்தில் மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஸீ ஜின்பிங் பிரதமர் மோடி சந்திப்புக்கு பின் பா.ஜ.,வுக்கு தேசிய அளவில் மட்டுமின்றி தமிழகத்திலும் செல்வாக்கு அதிகரித்துள்ளது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X