பொது செய்தி

இந்தியா

குற்ற வழக்குகள்: எந்தெந்த மாநிலங்கள் 'டாப்'

Updated : அக் 22, 2019 | Added : அக் 22, 2019 | கருத்துகள் (38)
Advertisement

புதுடில்லி: இந்தியாவில் 2017ம் ஆண்டில் நடந்த குற்ற சம்பவங்கள் தொடர்பாக தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பல்வேறு குற்ற சம்பவங்கள் குறித்த விவரங்களும் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் குற்றங்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுடுக்கப்பட்டாலும், குற்றங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன. இந்நிலையில் 2017ம் ஆண்டில் பதிவான குற்ற வழக்குகள் தொடர்பாக தேசிய குற்ற ஆவண காப்பகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், சுற்றுச்சூழல், கொலை, கொள்ளை, சைபர் போன்ற குற்றங்கள் தொடர்பான புள்ளி விவரங்களும் வெளியாகியுள்ளன.
பொது இடங்களில் சிகரெட் பிடித்தல், தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பயன்படுத்துதல் போன்ற சுற்றுச்சூழல் தொடர்பான மொத்த குற்ற வழக்குகளில் 49.2 சதவீத வழக்குகள் தமிழகத்தில் பதிவாகி இருப்பதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் குறிப்பிட்டுள்ளது. 2வது இடத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் 10,122 வழக்குகளும், 3வது இடத்தில் கேரள மாநிலத்தில் 6,780 வழக்குகளும் பதிவாகியுள்ளது.

அறியக்கூடிய குற்றங்களான கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் தொடர்பாக 2017ம் ஆண்டில் மட்டும் 50.07 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளன. அதில் அதிகபட்சமாக கேரளா மாநிலத்தில் 6.53 லட்சம் வழக்குகள் பதிவாகியுள்ளன. அடுத்த இடங்களில், உ.பி., (6 லட்சம் வழக்குகள்), மத்திய பிரதேசம் (4.67 லட்சம்), தமிழகம் (4.20 லட்சம்) உள்ளன.
இதில் கொலை வழக்குகள் மட்டும், 28,653 பதிவாகியுள்ளன. நாட்டிலேயே உ.பி.,யில் தான் அதிக கொலை வழக்குகள் (4,324) பதிவாகியுள்ளன. மேலும், 32,559 கற்பழிப்பு வழக்குகளில் மத்திய பிரதேசம் (5, 562) மற்றும் உ.பி., (4,246) முதலிரண்டு இடங்களில் உள்ளன.

சைபர் குற்றங்களை பொறுத்தவரையில் 2016ம் ஆண்டு பதிவான வழக்குகளை விட 2017ம் ஆண்டு இரண்டு மடங்கு வழக்குகள் அதிகரித்துள்ளன. அதில், உ.பி., (2,639) முதலிடத்திலும், மஹாராஷ்டிரா (2,380) இரண்டாமிடத்திலும், கர்நாடகா (1,101) மூன்றாம் இடத்திலும் உள்ளன. மெட்ரோ சிட்டிகளில் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumzi - trichy,இந்தியா
23-அக்-201900:05:52 IST Report Abuse
kumzi கொலை கொள்ளை இடுப்பு கிள்ளிகள் நிறைந்த கட்சிகள் பற்றி கணக்கெடுத்திருந்தால் நம்ம டீம்காவை அடிச்சிக்க கட்சிகளே கிடையாது
Rate this:
Share this comment
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
22-அக்-201919:31:43 IST Report Abuse
Rajagopal நம் ஊரில் விஞ்ஞான ரீதியில் குற்றம் செய்கிறார்கள். அதனால் எவரையும் பிடித்து மாட்டுவது கடினம். ஏனென்றால் படித்தவர்கள் அதிகம். வடக்கே படிப்பறிவு ரொம்பவும் கிடையாது. சட்டத்தை எவனும் மதிப்பதில்லை. அதனால் அங்கே குற்றங்களை செய்து விட்டு மறைத்து வைக்கும் திறன் அவர்களுக்கு இல்லை. பொள்ளாச்சி பாலியல் வழக்கு போல நம் ஊரில் நிறைய நடந்தாலும், ஒரு கேஸ் தான் வெளியில் வந்திருக்கிறது. இன்னும் எத்தனை கேஸ்கள் கம்பளத்துக்குக் கீழே பதுங்கி இருக்கின்றனவோ ஊழல் என்பதே ஒரு குற்றம்தான். ஊழல் இல்லாத மாநிலம் எது? குறைந்த பேர் குற்றம் செய்தாலும், அதில் இழப்பு எவ்வளவு என்று பார்க்க வேண்டும். மணல் கொள்ளை, சாராய ஆறு, சிலை திருடல் என்று மிகவும் உயர் நிலை குற்றங்கள்தான் நம் ஊரில் ஓடுகின்றன. சில்லறை குற்றங்கள் வட இந்தியாவில் அதிகம்.
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
22-அக்-201918:13:20 IST Report Abuse
blocked user மக்கள் தொகை விகிதாச்சாரப்படி பார்த்தால் பகுத்தறிவு ஜீவிகள்தான் அதிகம் குற்றம் செய்பவர்கள். திருந்த வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X