பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் மிக கனமழை தொடரும்

Updated : அக் 22, 2019 | Added : அக் 22, 2019 | கருத்துகள் (3)
Advertisement

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ள நிலையில் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த இருநாட்களுக்கு மிக கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.









அவர் கூறியதாவது: மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. அடுத்த இருநாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 'ரெட்' அலர்ட் திரும்பப் பெறப்படுகிறது.




காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் மிக கனமழையும், விழுப்புரம், கடலூர், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, புதுச்சேரி, மதுரை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. மத்திய, மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்பதால் இன்றும், நாளையும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாம்பன், மண்டபத்தில் தலா 18 செ.மீ., தங்கச்சிமடம் - 17 செ.மீ., காரைக்கால், புதுக்கோட்டை, அறந்தாங்கியில் தலா 11 செ.மீ., சேலம், மோகனூர் - 10 செ.மீ., மாமல்லபுரம், பெருஞ்சாணியில் தலா 9 செ.மீ., மழை பதிவாகியுள்ளது என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
padma rajan -  ( Posted via: Dinamalar Android App )
23-அக்-201906:24:12 IST Report Abuse
padma rajan சென்னையில் எப்போது ஏரிகள் நிரம்பும் அளவுக்கு மழை பெய்யும்? மற்ற ஊர்களில் பெய்யும் மழை அளவை விட சென்னையில் மழை மிகவும் குறைவு.
Rate this:
Share this comment
Cancel
22-அக்-201915:48:09 IST Report Abuse
Edison konnakuzhivilai கன்னியாகுமரி? தமிழ்நாடு இல்லயா?
Rate this:
Share this comment
Cancel
s.rajagopalan - chennai ,இந்தியா
22-அக்-201914:07:12 IST Report Abuse
s.rajagopalan தண்ணீர் பிரச்னை தீர்ந்தது ...கடலுக்கு நிறைய நீர் கிடைக்கும். அடுத்து ஆண்டு மீண்டும் இந்த பிரச்னை ....ஆளும் கட்சிகளுக்கும் எதிராக போராட்டம் ....தொலை காட்சிகள் மைக் ஐ பிடித்துக்கொண்டு ஊர் சுற்றி மக்களின் ஓலத்தை ஒளி பரப்பும் ..காலம் காலமாக இதைத்தானே பார்க்கிறோம் ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X