அரசியல் செய்தி

தமிழ்நாடு

டெங்குவை கட்டுப்படுத்த ஸ்டாலின் வலியுறுத்தல்

Added : அக் 22, 2019 | கருத்துகள் (12)
Advertisement
DMK,MKStalin,Stalin,Dengue,திமுக,ஸ்டாலின்,டெங்கு,நிலவேம்பு

சென்னை: சென்னையில் திமுக சார்பில், நிலவேம்பு கசாயம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது திமுக தலைவர் ஸ்டாலின் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு திமுக.,வினர் நிலவேம்பு கசாயம் கொடுக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் சில சிறார்கள் உயிரிழந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன. டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு, முழுமையாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
23-அக்-201909:52:35 IST Report Abuse
narayanan iyer ஸ்டாலின் பலதடவை திமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளும் கட்சியாகத்தான் செயல்படுகிறது என்று சொல்வார். எனவே ஆளும் அரசை விட நீங்களே கூடுதலாக மக்களுக்கு நன்மை செய்யுங்களேன். எதெற்கெடுத்தாலும் நாம் அரசை நம்பி பயனில்லை .எதிர்க்கட்சியாக இருக்கும்போதே அதுவும் ஏறக்குறைய பத்து ஆண்டுகள் பதவியில் இல்லாதபோதே கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுக்க முடிந்தது என்றால் நீங்களே மக்கள் பணியாற்ற செய்யலாமே
Rate this:
Share this comment
Cancel
22-அக்-201917:50:32 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் டெங்கு விஷயத்தில் தமிழக அரசு சரியாக செயல்படவில்லை , புகார் அளிக்கும் இடங்களுக்கு கூட கொசு மருந்து அடிப்பதில்லை. இன்று என் இருசக்கர வாகனத்திற்கு பஞ்சர் போட போனால் , டியூபை சோதிக்க வைத்திருக்கும் தண்ணீரில் ஏகப்பட்ட கொசு புழுக்கள் , அந்த தண்ணீரை நான் உடனடியாக கீழே ஊற்றிவிட்டேன் , 10 ரூபாய் கொடுத்து வேறு தண்ணீர் வாங்கி கொள், இரண்டு நாட்களுக்கு மேல் இந்த தண்ணீரை வைத்திருக்க கூடாது , கொசு உருவாகும் என்று விளக்கி விட்டு வந்தேன். மாநகராட்சி ஊழியர்கள் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை , இதுபோன்ற கடைகளில் முதலில் சோதித்து , விழிப்புணர்வு கொண்டு வரவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
22-அக்-201917:14:13 IST Report Abuse
வெறி நரி திமுக ஒழிக..பிஜேபி வாழ்க..மோடி ஜி ஜெய் ஹே..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X