அபிஜித்தின் ஆர்வம்: மோடி பெருமிதம்

Updated : அக் 22, 2019 | Added : அக் 22, 2019 | கருத்துகள் (20)
Share
Advertisement
Nobel, NobelPrize, AbhijitBanerjee, Modi, Prime Minister Modi, PM Modi, Narendra Modi, Economics, Dinamalar, நோபல், நோபல் பரிசு, பொருளாதாரம், அபிஜித், அபிஜித் பானர்ஜி, மோடி, பிரதமர், பிரதமர் மோடி, சந்திப்பு, தினமலர்

புதுடில்லி: பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெறும் அபிஜித் பானர்ஜி, பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். இச்சந்திப்பின் போது பொருளாதாரம் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

2019ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுக்கு பொருளியல் நிபுணர்கள் அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டூப்லோ, மைக்கேல் கிரீமர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் அபிஜித் பானர்ஜி இந்தியாவின் மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் பிறந்தவர்.
இந்தியாவின் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது எனவும், அதன் பிரச்னையை அரசு உணர்ந்தாலும் அதைவிட வேகமாக பொருளாதாரம் மோசமாக சென்றுக் கொண்டிருக்கிறது எனவும் அபிஜித் விமர்சித்தார். இதனால், மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் ஆகியோர் எதிர் கருத்து கூறினர்.


latest tamil news


இந்நிலையில் இந்தியா வந்துள்ள அபிஜித், இன்று (அக்., 22) டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அந்த சந்திப்பின் போது, பொருளாதார நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சந்திப்பு குறித்து மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: அபிஜித் பானர்ஜியுடனான சந்திப்பு வெகு சிறப்பாக அமைந்தது. இருவருக்கும் இடையே, ஆரோக்கியமான மற்றும் விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தச் சந்திப்பின் வாயிலாக சாமானியர்களின் அதிகார மேம்பாட்டின் மீது அபிஜித் கொண்டுள்ள ஆர்வம் தெளிவாக வெளிப்பட்டது. அபிஜித்தின் சாதனைகளைக் கண்டு இந்தியா பெருமிதம் கொள்கிறது. அவருடைய எதிர்காலப் பணிகள் சிறக்க மனமார்ந்த வாழ்த்துகள். இவ்வாறு மோடி பதிவிட்டுள்ளார்.


Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-அக்-201921:48:13 IST Report Abuse
ஆப்பு அப்ப அடுத்த பொருளாதார ஆலோசகர் பதவி கிடைக்குமோ? இப்போ இருக்குறவர் சுமார்தான்.
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
22-அக்-201919:20:00 IST Report Abuse
spr குறைந்த விலையில் விற்றுக் கொண்டிருந்த வெங்காயத்தைப் பண்டிகைக் காலங்களில் முன்னதாகவே பதுக்கி வைத்து, மக்களிடையே அது கிடைக்காத ஒன்று என நம்ப வைத்து, செயற்கையாக ஒரு தட்டுப்பாட்டை உண்டாக்கி, விலையேற்றம் உண்டாக்கி மக்களைப் போட்டி போட்டுக்கொண்டு வாங்க வைத்து கொள்ளை லாபம் அடிப்பது ஒவ்வொரு பண்டிகைக் காலங்களிலும் நடப்பது வழக்கம் என்று அறிந்த பின்னும் இப்படிப் பேசுவது அறிவீனம். வெங்காயத்தின், அதிகரிக்கும் தேவைக்கேற்ப உடனடியாக உற்பத்தியினை அதிகரிக்க இயலாது. இங்கு இயல்பாகச் செய்யப்பட வேண்டியது பதுக்கலை தடுத்தால் மக்களுக்கு அப்பொருள் குறைவில்லாமல் குறைந்த விலையில் கிடைக்க அரசு வழி செய்ய வேண்டும் நம் பொருளாதாரப் பேதைகள் சொல்வது போல மக்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிப்பது அல்ல. அவர்களுக்குக் “கிரெடிட் கார்டு” மூலம் கடன் கொடுப்பது அல்ல. எப்படியும் கருப்புப் பணம் உள்ளவர்கள் தங்கள் தேவையினை என்ன விலை கொடுத்தும் அனுபவிப்பார்கள் ஒரு காலத்தில் ஆடம்பரம் என எண்ணப்பட்ட பல செலவுகள் இன்று அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது. இன்றைய வாழ்வை வாழ்ந்து விடுவோம் என்று எண்ணும் ஏழை எளியவர்கள் பெரும்பாலும் அன்றாட வாழ்வை பாதிக்கும் பிளம்பர், மின்சார உபகரணங்கள் பழுது பார்த்தல், போன்ற சேவை புரிபவர்களாக இருப்பதாலும், அவர்கள் சேவை இன்றியமையாத ஒன்று என பிறரால் ஏற்றுக் கொள்ளப்பட்டதாலும், அவர்களின் வருமானம் தன்னிச்சையாக உயருகிறது. உணவு, உடை, உறையுள் என்ற அடிப்படைத் தேவைகளின் விலை அதிகமாக உயரவில்லை. ஆனால் மக்கள் அவர்களும் கைபேசி, இருசக்கர வாகனம், குடிப்பது எனத் தங்களின் ஆடம்பர வாழ்வை நடத்தவே அதிக வருமானம் கேட்கிறார்கள் நடுத்தர மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்க அவர்களுக்கு நிலையான வருமானம் வேண்டும். அதற்கு , அவரவர் படிப்பு, திறமை இவற்றுக்கேற்ற நல்ல வருமானம் தரும் வேலை வாய்ப்பு பெருக வேண்டும். தரமான பொருட்கள், அகவிலை குறைந்தவையாக இருக்கும்படி உற்பத்தி அதிகரிக்க வேண்டும் அடிப்படைத் தேவைகளை மக்கள் நிச்சயம் வாங்குவார்கள் ஆடம்பரத் தேவைகள் அவரவர் வாங்கும் சக்திக்கேற்பவே அமையும். சந்தையின் தேவையறியாமல், அதிகமாக உற்பத்தி செய்துவிட்டு அவை விற்காமற் போவதால் நஷ்டம் என்று புலம்புவது அறிவீனம் இதையன்றியும், சிற்றுந்துகள போன்றவையின் விற்பனையும், மாசுக்கட்டுப்பாடு குறித்த அரசின் முடிவுகள், மக்கள் அன்றாடம் அவற்றைப் இயக்கத் தேவையான எரிசக்தி கிடைப்பது அதன் செலவுகள் , பராமரிக்க ஆகும் செலவுகள் சாலை கட்டமைப்பு, நிரந்தரமில்லாத வேலை வாய்ப்பு, வருமான இழப்பு எனப் பல காரணங்களால் குறையும். எனவே பொத்தாம் பொதுவாக மக்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிக்க வேண்டும் என்பது சரியல்ல.
Rate this:
Cancel
Ranganathan Venkata Subramanian - COIMBATORE,இந்தியா
22-அக்-201918:45:04 IST Report Abuse
Ranganathan Venkata Subramanian எப்பேர்ப்பட்ட மனிதர்களையும் தன ஒரு சந்திப்பின்மூலம் தன்வசப்படுத்திவிடுவார் எங்கள் மோடிஜி எப்பொழுதும் தன்னலமற்ற மனிதர்களுக்கு ஆண்டவன் துணையிருப்பான் வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X