வலைவிரிக்கும் ஊடகங்கள்: அபிஜித்தை எச்சரித்த மோடி

Updated : அக் 22, 2019 | Added : அக் 22, 2019 | கருத்துகள் (26)
Advertisement

புதுடில்லி: பிரதமர் மோடி குறித்து எதிர்ப்பு கருத்துகளை நான் கூறுவதற்காக ஊடகங்கள் வலைவிரிப்பதாக, மோடி என்னை வேடிக்கையாக எச்சரித்தார் என நோபல் பரிசு பெறும் அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்.





2019ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்தியர் அபிஜித் பானர்ஜி இன்று (அக்., 22) டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அந்த சந்திப்பின் போது, பொருளாதார நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.




பின் நிருபர்களை சந்தித்து அபிஜித் கூறியதாவது: ஆலோசனைக்கு முன்பே, தன் மீதான எதிர் கருத்துகளை கூறுவதற்காக ஊடகங்கள் உங்களுக்கு வலைவிரிக்கின்றன என வேடிக்கையாக மோடி எச்சரித்தார். அவர் தொலைக்காட்சியில் அனைத்தையும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார். நீங்கள் (நிருபர்கள்) என்ன செய்ய முயற்சிக்கிறீர்கள் என்பதும் அவருக்கு தெரிகிறது. அதனால் அது தொடர்பாக நான் எதுவும் சொல்ல மாட்டேன்.
பிரதமர் தனது பொன்னான நேரத்தை எனக்காக ஒதுக்கி நிறைய விஷயங்கள் பற்றி பேசினார். இந்தியா மீது அவர் கொண்டுள்ள பார்வை தனித்துவமானது. இச்சந்திப்பு எனக்கு கிடைத்த சிறப்பு. இவ்வாறு அபிஜித் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vmmoorthy Moorthy - hyderabad,இந்தியா
23-அக்-201912:15:04 IST Report Abuse
Vmmoorthy Moorthy நீங்க பெரிய ஆள் தான் பாம்பும் சாகனும் கம்பும் உடையக்கூடாது பயந்துட்டார் போல தெரிகிறது
Rate this:
Share this comment
Cancel
murali - Chennai,இந்தியா
22-அக்-201921:16:37 IST Report Abuse
murali தண்டக்கோனுக்கு தி மு க அப்ப அப்ப வேலை கொடுக்கறானுகோ.
Rate this:
Share this comment
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
22-அக்-201920:29:57 IST Report Abuse
vbs manian உழைக்காத உழைக்க விரும்பாத நபர்களுக்கெல்லாம் மாதம் தோறும் இலவசமாக பண உதவி செய்ய வேண்டும் என்ற கொள்கை எவ்வளவு தூரம் சாத்தியமாகும். நாடு திவால் ஆகி விடும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X