வலிய சென்றதில்லை, வந்த சண்டையை விட்டதில்லை: ராஜ்நாத்

Updated : அக் 22, 2019 | Added : அக் 22, 2019 | கருத்துகள் (6)
Advertisement
BJP, RajnathSingh, Minister, Pakistan, India, Army, பாஜ., பாஜக, ராஜ்நாத் சிங், பாகிஸ்தான், இந்தியா, ராணுவம், பதிலடி, பாதுகாப்பு அமைச்சர்

மும்பை: இந்தியா எப்போதுமே அண்டை நாடுகளுடன் வலிய சண்டைக்கு சென்றதில்லை, ஆனால் அத்துமீறுபவர்களுக்கு பதிலடி கொடுக்கவும் தயங்கியதில்லை என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

சமீபத்தில் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள டங்தார் பகுதியில் பாக்., ராணுவம் இந்திய நிலைகள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் 3 பேர் பலியாகினர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம், அங்குள்ள முகாம்களின் மீது தாக்குதலில் ஈடுபட்டது. இதில் 5 பாக்., ராணுவ வீரர்கள் உட்பட சில பயங்கரவாதிகளும் உயிரிழந்தனர். இதற்கு அந்நாட்டு ரயில்வே அமைச்சர் ஷேக் அகமது, இந்தியாவுக்கு அணு ஆயுதங்கள் மூலம் பதிலடி கொடுப்போம் என கூறினார்.




இந்நிலையில், மும்பையில் கடற்படை தளபதிகள் மாநாடு நடைபெற்றது. மாநாட்டை தொடங்கி வைத்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: இந்தியா எப்போதுமே அண்டை நாடுகளுடன் வலிய சண்டைக்கு சென்றதில்லை. ஒரு அங்குல அந்நிய நிலப்பரப்பைக் கூட ஆக்கிரமித்தது இல்லை. அதே நேரத்தில் அத்துமீறல் நடக்கும்போது தகுந்த பதிலடி கொடுக்க நம் படைகள் தயங்கியதில்லை. இவ்வாறு ராஜ்நாத் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-அக்-201910:34:05 IST Report Abuse
ஆப்பு 2014 லேருந்துன்னு சொல்லுங்க. அதுக்கு முன்னாடின்னா காங்கிரஸ் ஆட்சியருக்கு கிரெடிட் போயிருமே...
Rate this:
Share this comment
Cancel
Amit -  ( Posted via: Dinamalar Android App )
22-அக்-201921:42:10 IST Report Abuse
Amit தேர்தல் வந்தா இந்த டயலாக்
Rate this:
Share this comment
Cancel
சமத்துவம் - Chennai,இந்தியா
22-அக்-201920:04:54 IST Report Abuse
சமத்துவம் பாக்கிஸ்தான் வசம் இருக்கும் அணு ஆயுதங்கள் பைத்தியக்காரன் கையில் கிடைத்த துப்பாக்கி போன்றது. கண்டிப்பாக இந்தியா உலக நாடுகளின் கவனத்துக்கு இதை எடுத்து செல்ல வேண்டும். அவர்களின் அணு ஆயுதங்கள் முற்றிலுமாக பறிமுதல் செய்யப்பட வேண்டும்.பாக்கிஸ்தான் ஒரு செல்லா காசு நாடு என்று அமெரிக்காவுக்கு நன்றாக தெரிந்ததால் தான் இதனைக்கண்டும் காணாமல் இருக்கிறார்கள்...இதே ஒரு எண்ணை வளம் உள்ள நாடு என்றால், ஈரானில் இறங்கியது போல் பாகிஸ்தானிலும் இறங்கியிருப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X