வலிய சென்றதில்லை, வந்த சண்டையை விட்டதில்லை: ராஜ்நாத்| Dinamalar

வலிய சென்றதில்லை, வந்த சண்டையை விட்டதில்லை: ராஜ்நாத்

Updated : அக் 22, 2019 | Added : அக் 22, 2019 | கருத்துகள் (6)
BJP, RajnathSingh, Minister, Pakistan, India, Army, பாஜ., பாஜக, ராஜ்நாத் சிங், பாகிஸ்தான், இந்தியா, ராணுவம், பதிலடி, பாதுகாப்பு அமைச்சர்

மும்பை: இந்தியா எப்போதுமே அண்டை நாடுகளுடன் வலிய சண்டைக்கு சென்றதில்லை, ஆனால் அத்துமீறுபவர்களுக்கு பதிலடி கொடுக்கவும் தயங்கியதில்லை என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

சமீபத்தில் பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள டங்தார் பகுதியில் பாக்., ராணுவம் இந்திய நிலைகள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தியதில் 3 பேர் பலியாகினர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம், அங்குள்ள முகாம்களின் மீது தாக்குதலில் ஈடுபட்டது. இதில் 5 பாக்., ராணுவ வீரர்கள் உட்பட சில பயங்கரவாதிகளும் உயிரிழந்தனர். இதற்கு அந்நாட்டு ரயில்வே அமைச்சர் ஷேக் அகமது, இந்தியாவுக்கு அணு ஆயுதங்கள் மூலம் பதிலடி கொடுப்போம் என கூறினார்.




இந்நிலையில், மும்பையில் கடற்படை தளபதிகள் மாநாடு நடைபெற்றது. மாநாட்டை தொடங்கி வைத்த மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: இந்தியா எப்போதுமே அண்டை நாடுகளுடன் வலிய சண்டைக்கு சென்றதில்லை. ஒரு அங்குல அந்நிய நிலப்பரப்பைக் கூட ஆக்கிரமித்தது இல்லை. அதே நேரத்தில் அத்துமீறல் நடக்கும்போது தகுந்த பதிலடி கொடுக்க நம் படைகள் தயங்கியதில்லை. இவ்வாறு ராஜ்நாத் பேசினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X