பொது செய்தி

இந்தியா

உயரதிகாரிகள் மீது குற்றச்சாட்டு: இன்போசிஸ் பங்குகள் வீழ்ச்சி

Updated : அக் 22, 2019 | Added : அக் 22, 2019 | கருத்துகள் (9)
Advertisement
Infosys, Shares, Sink, CEO, dinamalar, தினமலர், இன்போசிஸ், பங்குகள், முதலீட்டாளர்கள், இழப்பு,

புதுடில்லி: இன்போசிஸ் நிறுவனத்தின், தலைமை செயல் அதிகாரி சலீல் பரேக் மற்றும், தலைமை நிதி அதிகாரி நிலஞ்சன் ராய் ஆகியோர், குறுகிய கால வருவாய் மற்றும் லாபத்தை உயர்த்துவதற்காக, நெறிமுறையற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதாக, 'நெறிமுறை கொண்ட ஊழியர்கள்' என்ற பெயரில், ஒரு குழுவினரால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்நிறுவனத்தின் பங்குகள் விலை நேற்று, 16.21 சதவீதம் சரிந்தது. இதனால், நிறுவனத்தின் சந்தை மதிப்பும், 53 ஆயிரத்து, 451 கோடி ரூபாய் அளவுக்கு குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையில், ஒரு பங்கின் விலை, 16.21 சதவீதம் சரிந்து, 643.30 ரூபாயாக குறைந்தது. தேசிய பங்குச் சந்தையில், 16.65 சதவீதம் குறைந்து, ஒரு பங்கின் விலை, 640 ரூபாயாக நிலைபெற்றது.இதையடுத்து, நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 2.76 லட்சம் கோடி ரூபாயாக சரிந்தது.நிறுவனத்தின் இரண்டு உயரதிகாரிகள் மீது, ஒரு குழுவினர் குற்றம் சாட்டியிருக்கும் நிலையில், நிறுவனத்தின் நடைமுறைப்படி இந்த புகாரானது தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் தலைவர் நந்தன் நிலேகனி, இப்புகார் மீது தனிக்கை குழு சுதந்திரமான விசாரணையை நடத்தும் என தெரிவித்துள்ளார்.இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தைமதிப்பு சரிந்த நிலையில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு வர்த்தகத்தினிடையே மீண்டும், 9 லட்சம் கோடி ரூபாயை தொட்டது. வர்த்தகத்தின் முடிவில், சந்தை மதிப்பு, 8.98 லட்சம் கோடி ரூபாயாக குறைந்தது.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sweetline -  ( Posted via: Dinamalar Android App )
23-அக்-201908:09:54 IST Report Abuse
Sweetline dinamalar should write in details on why it came down. The reason for this is calling 2 board of directors as madarasi fellows and mentioning another north indian person with caste name. inappropriate words let them go down. My dear Tamil people are also using such shaming words on other tamil people as dumilans and all. People never worry about how others feel nowadays.
Rate this:
Share this comment
Cancel
22-அக்-201921:44:31 IST Report Abuse
ஆப்பு நேரு செஞ்ச சதின்னு இழுத்து மூடிருங்க....மக்கள் நம்பிருவாங்க.
Rate this:
Share this comment
அருணாசலம், சென்னைமோடி செஞ்ச சதி என்று சொல்லி இன்னும் இழுங்களேன்....
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
22-அக்-201919:38:31 IST Report Abuse
Pugazh V தனியார் மயமாக்க வேண்டும் என்று துடிக்கும் கூட்டம் என்ன சொல்கிறது? பொதுத்துறைகள் பொய்யான கணக்கு காட்ட மாட்டார்கள். தனியார் துறைகளில் பொய்யான கணக்கு வாடிக்கை தான் என்று ஒத்துக் கொள்கிறார்கள்.
Rate this:
Share this comment
22-அக்-201920:37:46 IST Report Abuse
பழனிவாத்யார் அதுக்காக கவர்மெண்ட் அதிகாரிக ரொம்ப யோக்கியம்ன்னு எவனும் ஒத்துக்க போறதில்ல. அதனால நீர் ஒடனே சந்துல சிந்து பாடாதேயும். ஆமா, என் கேள்விக்கு இன்னும் பதில் வரலியே வாத்தியார்?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X