மலரடி தொழுதேன்

Updated : அக் 22, 2019 | Added : அக் 22, 2019
Share
Advertisementlatest tamil newsமலரடி தொழுதேன்மனம்வி்ட்டு அழுதேன்மணிகண்டன் சன்னதியில்...


latest tamil newsநான் என் கடமைக்கு தந்த அளவு கடவுளர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தவனா? என்று யோசித்து பார்த்தால் இல்லை என்றே படுகிறது.


latest tamil newsஆனாலும் கடவுள் எனக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுத்துவருகிறார்.அவரது ‛குட்புக்கில்' எனது பெயரை தனியாக எழுதிவைத்திருக்கிறார் போலும்.
அவர்களுக்கான படம் எடுக்க வேண்டும் என்றால் ‛கூப்பிடு முருகராஜை' என்று எப்படியாவது என்னை தன் இடத்திற்கு வரவழைத்துவிடுகிறார்.
அதற்கு பிறகு அந்த படத்தையும்,இடத்தையும் தெய்வீகத்தன்மைக்கு உயர்த்தும் உன்னத பணியையும் அவரேபார்த்துக் கொள்கிறார்.
மதுரை மீனாட்சி அம்மனில் இருந்து சபரிமலை ஐயப்பன் வரை மாநிலங்கள் கடந்தும் தெய்வங்கள் விடுக்கும் அழைப்பு அன்று தொட்டு இன்று வரை இப்படித்தான் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
நானும்,‛ செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நமது செல்வம்' என்ற பாடிய பட்டுக்கோட்டையார் பாணியில் சாமி சம்பந்தப்பட்ட படங்கள் எடுப்பதையும் அவர்கள் விழா பற்றி எழுதுவதையும் முழு ரசனையுடன் செய்து வருகிறேன்.
அப்படித்தான் கடந்த பல ஆண்டுகளாக திருப்பதி திருமலை பிரம்மோற்சவம் சென்று வருபவன் என்ற முறையில் ‛பிரம்மாண்ட நாயகனின் பிரம்மோற்சவம்' என்ற தலைப்பில் திருப்பதி பற்றிய எனது அனுபவங்களை தொகுத்து எழுதி புத்தகமாக வெளியிட்டேன்.
புத்தகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து புத்தகத்தை பதிப்பித்த ‛தாமரை பிரதர்ஸ்' இயக்குனர்களில் ஒருவரான திரு.ஆதர்ஷ் அவர்கள் என்னை அழைத்து,‛ சபரிமலை ஐயப்பன் பற்றி ஒரு புத்தகம் எழுதுங்கள் அந்த புத்தகமும் கார்த்திகை மாதம் துவங்குவதற்குள் வருமாறு பார்த்துக் கொள்ளுங்கள்' என்று சொல்லிவிட்டார்.
கேமிராவில் பிலிம் போட்டு போட்டோ எடுத்த காலத்தில் இருந்து சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பல முறை சர்வசாதாரணமாக சென்று வந்திருக்கிறேன். கேரளா பத்திரிகை புகைப்படக்கலைஞர்கள் கூட ஆராட்டு நேரத்தில் யானையில் ஐயப்பன் கோவிலை கிளம்புவதை எடுத்துவிட்டு விலகி்க்கொள்வர் ஆனால் நான் அந்த யானையுடன் காட்டுப்பாதையில் கூடவே நடந்து வந்து யாரும் எடுக்காத படங்களை எடுத்து ,கொடுக்காத ஆங்கிளில் பக்கம் பக்கமாக கொடுத்துவந்தேன்.
அதற்கு பதில் உபகாரமாக இப்போது தன்னைப்பற்றி எழுதுவதற்கு என்னை பணித்துள்ளார் போலும் என்று சந்தோஷப்பட்டுக் கொண்டேன்
ஆனால் எதையும் நேரில் போய் பார்த்து ஆய்ந்து அறிந்து கேட்டு தெளிந்தபின் எழுதுவதே பெரும்பாலும் எனது பாணி என்பதால் நீண்ட வருடத்திற்கு பிறகு கடந்த ஞாயிற்றுக்கிழமை சபரிமலையில் இருப்பது போல திட்டமிட்டு சென்றேன்.
என்னது முதுகில் இவ்வளவு பெரிய கேமிரா பேக்? மலை மேலே ஏறணும் கடுமையா மூச்சு வாங்கும் பராவாயில்லையா என்று உடன் வந்தவர் மறைமுகமாக பயமுறுத்திப் பார்த்தார், முடிந்தவரை முயற்சிக்கிறேன் என்று சொல்லிவிட்டேன்.
மலையில் கட்டிட வேலைகளுக்கான சிமெண்ட் செங்கல் போன்ற வேலைகளைச் செய்ய டிராக்டர் செல்லும் அதில் கேட்டும் பார்த்தார், ‛முடியாது' என்று சொல்லிவிட்டனர்
மொத்தம் உள்ள ஐந்து கிலோமீட்டர் மலைப்பயணத்தி்ல் அரைகிலோமீட்டர் துாரம் ஏறிய உடனேயே நடக்க முடியாத பக்தர்களை கூடை நாற்காலியில் வைத்து துாக்கி செல்லும் ஆட்கள் ‛சாமி டோலியில போலாம்' என்று ஆசைகாட்டி இழுத்தனர், வேண்டாம் மனிதனை மனிதன் இழுக்கும் கல்கத்தா ரிக்சாவில் ஏறுவதையே பாவம் என்பவன் நான் இது அதைவிட பாவம் என்று மனதிற்குள் தத்துவம் சொல்லிவிட்டு நடையைத் தொடர்ந்தேன்.
நீலிமலை கொஞ்சம் சிரமமாக இருந்தது அப்பச்சி மேடு அதைவிட சிரமமாக இருந்தது ஆனால் அடுத்த முறை வந்தாலும் நடந்துதான் வரவேண்டும் என்ற அளவிலேயே இருந்தது.
நான் முன்பு வந்ததற்கும் இப்போது வந்ததற்கும் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது பக்தர்களுக்கு தேவஸ்தான நிர்வாகம் முடிந்த அளவு வசதிகள் செய்து கொடுத்துள்ளது
காதில் மாட்டியிருந்த இயர் போன் வழியாக பாடகர் ஏசுதாசின் ஐயப்பன் பாடல்கள் நடைக்கு துணையாக ஒலித்துக் கொண்டு வந்தது அதிலும் மலரடி தொழுதேன் மனம்விட்டு அழுதேன் மணிகண்டன் சன்னதியில் என்ற வரிகள் இடம் பெற்ற பாடல் மிகவும் பிடித்துப் போயிருந்தது.
அது போல சன்னிதானத்தி்ல் நமக்கும் கண்ணீர் கசியுமா? என்ற யோசனையுடன் சென்றேன் கூட்டம் அதிகமாக இருந்தது முதுகில் கைவைக்காத குறையாக தள்ளிவிட்டனர் ஆனாலும் மின்னல் போல சில வினாடி தரிசனத்தில் வந்துட்டியா? என்று கேட்டு ஐயப்பன் என்னைப் பார்த்து புன்னகைத்தது போல இருந்தது.
இதற்கு மேல் நடந்த கேட்ட விசாரித்த அனுபவித்த விஷயங்கள் அனைத்தையும் தவறாமல் புத்தகத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள் நன்றி!
-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X