பொது செய்தி

தமிழ்நாடு

அடுத்தடுத்து தடுப்பணை... மழை நீர் சேமித்து சாதனை

Added : அக் 22, 2019 | கருத்துகள் (10)
Advertisement
 அடுத்தடுத்து தடுப்பணை...  மழை நீர் சேமித்து சாதனை

கோவை, சுண்டக்காமுத்துாரில் உள்ள அய்யன் குட்டை மற்றும் ஏழு தடுப்பணைகளை, 'சிறுதுளி' அமைப்பு துார்வாரியதன் பலனாக, தற்போது பெய்த மழைக்கு நீர் தேங்கியுள்ளது.

கோவையில் உள்ள பெரும்பாலான குளங்களை, பொதுப்பணித்துறை மற்றும் தனியார் நிறுவனங்களுடன் கைகோர்த்து, 'சிறுதுளி' அமைப்பு துார்வாரியது. சுண்டக்காமுத்துார் கிராமத்தில், 10.1 ஏக்கர் பரப்பளவுள்ள அய்யன் குட்டை துார்வாரப்படாமல் இருந்தது.'சிறுதுளி' அமைப்பு களமிறங்கி, தனியார் நிறுவனத்திடம் சமுதாய பொறுப்பு நிதி பெற்று, குட்டையை சுற்றிலும் இருந்த முள் மரங்களை அகற்றியது. துார்வாரி, கரையை பலப்படுத்தியது. மையப்பகுதியில் மண் திட்டு உருவாக்கி, நீர் வழித்தடத்தை சீரமைத்து, உபரி நீர் வெளியேறும் பகுதியில் தடுப்புச்சுவர் சீரமைக்கப்பட்டது.

இதேபோல், மாதம்பட்டி அருகே உள்ள குமரன் குட்டையும் மேம்படுத்தப்பட்டது; 11.04 ஏக்கர் பரப்பளவு கொண்ட இக்குட்டை பராமரிப்பின்றி இருந்தது. 3.16 மீட்டர் ஆழத்துக்கு துார்வாரி, 9.02 ஏக்கர் பரப்புக்கு தண்ணீர் தேக்கும் வசதி செய்யப்பட்டது. ஓடை குறுக்கே, ஒன்றன் பின் ஒன்றாக, வரிசையாக அமைந்துள்ள ஏழு தடுப்பணைகள் புதுப்பிக்கப்பட்டன.கடந்த ஒரு வாரமாக, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் மழைப்பொழிவு காணப்படுகிறது; நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால், அய்யன் குட்டைக்கும், ஏழு தடுப்பணைக்கும் நீர் வரத்து காணப்படுகிறது.

'சிறுதுளி' நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் கூறுகையில், ''தமிழக அரசின் ஒத்துழைப்புடன், விவசாயிகளுடன் இணைந்து, தனியார் நிறுவனங்களிடம் சமுதாய பொறுப்பு நிதி பெற்று, நீர் நிலைகளை துார்வாரினோம். பெருமுயற்சி எடுத்து, குட்டையை துார்வாரி, ஏழு தடுப்பணைகளை மீட்டெடுத்தோம். தற்போது பெய்த மழைக்கு, குட்டைகள் மற்றும் தடுப்பணைகளில் நீர் தேங்கியுள்ளது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல், அய்யன்குட்டையை சுற்றியுள்ள பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயரும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PR Makudeswaran - Madras,இந்தியா
26-அக்-201909:19:50 IST Report Abuse
PR Makudeswaran அரசும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் கொள்ளையடிக்க மட்டுமே தெரிந்தவர்கள். நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Jayvee - chennai,இந்தியா
25-அக்-201915:28:54 IST Report Abuse
Jayvee ஓட்ட வாயன் பியூஸ் மனுஷ் எங்கே ? அவன் ஒரு அரசியல் பொம்மை.. காசுக்காக பொது சேவை செய்யும் நெக்ஸால்
Rate this:
Share this comment
Cancel
Ram Sethuraman - Mississauga, Canada,கனடா
25-அக்-201900:21:07 IST Report Abuse
Ram Sethuraman இது அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை. வரி பணத்தை அரசு என்ன செய்கிறது. அரசு ஊழியர்களுக்கு வருட வருட சம்பள உயர்வு. அரசு கடன் சுமை கூடி கொண்டே செல்கிறது. எங்கே இந்த பணம் எல்லாம் செல்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X