புதுடில்லி: சீன பட்டாசுகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்வோர் மற்றும் பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுங்கத்துறை எச்சரித்துள்ளது.
இது குறித்து சுங்கத்துறை வெளியிட்ட அறிக்கையில், சீன பட்டாசுகளை சட்டவிரோதமாக இறக்குமதி செய்வதோ, விற்பதோ பயன்படுத்துவதோ, குற்றம். சீன பட்டாசுகளில் சுற்றுச் சூழலை பாதிக்கும் தடை செய்யப்பட்ட ரசாயனங்கள் உள்ளன. சீன பட்டாசுகளை பயன்படுத்துவது வெடிபொருள் சட்டத்திற்கு எதிரானது. சீன பட்டாசுகளை வாங்குவது உள்நாட்டு தொழில் மற்றும் வணிகத்துறை பாதிக்கும். அவ்வாறு விதிமீறலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொது மக்கள் சீன பட்டாசுகளை வாங்குவதை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.