காங்., எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வுக்கு ஓட்டம்

Updated : அக் 22, 2019 | Added : அக் 22, 2019 | கருத்துகள் (16)
Share
Advertisement

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் காங்., எம்.எல்.ஏ.,க்கள் 4-5 பேர் , ஜே.எம். எம். கட்சியினர் பா.ஜ.,வுக்கு ஓட்டம் பிடித்தனர்.



latest tamil news




ஜார்கண்ட் மாநிலத்தின் சட்டசபை காலம் விரைவில் முடிவடைந்து தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. இதனை முன்னிட்டு பா.ஜ., முதல்வர் ரகுபர் தாஸ் மக்களை சந்திக்கும் விதமாக ஜன ஆர்பாத் யாத்திரையை துவங்கி உள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் பிற கட்சி எம்.எல்.,க்கள் பா.ஜ.,வுக்கு ஓட்டம் பிடிப்பது துவங்கி உள்ளது.


latest tamil news



இதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மாநில தலைவரும், தற்போதைய எம்.எல்.ஏ.,வுமான சுக்தியோ பகத் மற்றும் மனோஜ் யாதவ் உள்ளிட்ட 4 முதல் 5 காங்., எம்.எல்.ஏக்கள் பா.ஜ.,வுக்கு ஓட்டம் பிடித்துள்ளனர்.

அதே போல் ஜார்கண்ட முக்தி மோர்சா என்றழைக்கப்படும் ஜே.எம்.எம். கட்சியை சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ.க்களும் பா.ஜ., பக்கம் தாவி உள்ளனர். இவர்கள் அனைவரும் நாளை (23ம் தேதி) பா.ஜ.,வில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
23-அக்-201913:34:44 IST Report Abuse
இந்தியன் kumar கட்சியில் நல்லவர்களை சேர்க்க வேண்டும். சரி இல்லாதவர்களை நிராகரிக்க வேண்டும்.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
23-அக்-201911:12:51 IST Report Abuse
Lion Drsekar சான்றோர்கள் மிக அழகாக கூறியிருக்கிறார்கள் "காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்" . வந்தே மாதரம்
Rate this:
Cancel
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
23-அக்-201910:17:40 IST Report Abuse
நக்கீரன் இன்றைக்கு இது ஒரு புது பாணியாகி விட்டது. இப்படி கொள்ளையடித்து விட்டு ரெய்டுக்கு பயந்து ஓடி வருகிறவர்களை பிஜேபி தன்னுடன் சேர்த்துக்கொள்ளக் கூடாது. தமிழ்நாட்டில் சட்ட விரோதமாக சொத்து சேர்த்த பலர் தேச பக்தர்கள் வேடத்தில் பிஜேபியில் இணைந்து வருகிறார்கள். இவர்களை போன்றோரை சேர்த்தால் பிஜேபி சாக்கடையாகும். கவனம் மோடிஜி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X