4-5 Cong, JMM legislators set to join BJP in Jharkhand | காங்., எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வுக்கு ஓட்டம்| Dinamalar

காங்., எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வுக்கு ஓட்டம்

Updated : அக் 22, 2019 | Added : அக் 22, 2019 | கருத்துகள் (16)

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் காங்., எம்.எல்.ஏ.,க்கள் 4-5 பேர் , ஜே.எம். எம். கட்சியினர் பா.ஜ.,வுக்கு ஓட்டம் பிடித்தனர்.







ஜார்கண்ட் மாநிலத்தின் சட்டசபை காலம் விரைவில் முடிவடைந்து தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. இதனை முன்னிட்டு பா.ஜ., முதல்வர் ரகுபர் தாஸ் மக்களை சந்திக்கும் விதமாக ஜன ஆர்பாத் யாத்திரையை துவங்கி உள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி மீது அதிருப்தியில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் பிற கட்சி எம்.எல்.,க்கள் பா.ஜ.,வுக்கு ஓட்டம் பிடிப்பது துவங்கி உள்ளது.





இதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மாநில தலைவரும், தற்போதைய எம்.எல்.ஏ.,வுமான சுக்தியோ பகத் மற்றும் மனோஜ் யாதவ் உள்ளிட்ட 4 முதல் 5 காங்., எம்.எல்.ஏக்கள் பா.ஜ.,வுக்கு ஓட்டம் பிடித்துள்ளனர்.

அதே போல் ஜார்கண்ட முக்தி மோர்சா என்றழைக்கப்படும் ஜே.எம்.எம். கட்சியை சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ.க்களும் பா.ஜ., பக்கம் தாவி உள்ளனர். இவர்கள் அனைவரும் நாளை (23ம் தேதி) பா.ஜ.,வில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X